7th Pay Commission: மீண்டும் DA Hike, ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ

பணியாளர்கள் பணவீக்கத்திலிருந்து சிறிது நிவாரணம் பெற, 3% அகவிலைப்படி உயர்வை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் கோருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2021, 03:50 PM IST
  • இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
  • ஜூன் 2021 க்கான அகவிலைப்படி, செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
  • செப்டம்பர் மாத சம்பளத்துடன் ஊழியர்கள் இதை பெறக்கூடும்.
7th Pay Commission: மீண்டும் DA Hike, ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ  title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஜூலை 1 முதல் 28 சதவீதம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மத்திய அரசு அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது. 

இதற்கிடையில், இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மற்றொரு நல்ல செய்தியும் கிடைக்கவுள்ளது. அரசு, பண்டிகை காலங்களில் அகவிலைப்படியில் மேலும் 3% அதிகரிப்பை செய்யக்கூடும். அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 31% ஆக உயரும். அதாவது, ஊழியர்கள் காட்டில் பண மழை பொழியப் போகிறது.

அகவிலைப்படி மேலும் 3% அதிகரிக்கும்

பணியாளர்கள் பணவீக்கத்திலிருந்து சிறிது நிவாரணம் பெற, 3% அகவிலைப்படி உயர்வை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் கோருகிறது. AICPI குறியீட்டின் தரவு வெளிவந்துவிட்டது. இந்த குறியீடு 121.7 ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021 க்கான அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படுவது உறுதி. ஜூன் 2021 க்கான குறியீடு 1.1 புள்ளிகள் அதிகரித்துள்ளதால், இது 121.7-ஐ எட்டியுள்ளது.

அகவிலைப்படி 31% ஆக உயரும்

குறியீட்டு தரவுகளின் படி, அகவிலைப்படி 31.18 சதவிகிதமாக இருக்கும், ஆனால், அகவிலைப்படி கணக்கீடு மொத்தமாக (round calculation) கணக்கிடப்படுவது வழக்கம். ஆகையால், இப்போது அகவிலைப்படி 31%ஆக இருக்கும். ஜூன் 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance), செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படலாம் என்று மதிப்பிடப்படுகிறது. செப்டம்பர் மாத சம்பளத்துடன் ஊழியர்கள் இதை பெறக்கூடும். 

ALSO READ:: 7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய தகவலை அளித்தது அரசு

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

இப்போது ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக மாறும். 7 வது ஊதியக்குழு மேட்ரிக்ஸ் (7th Pay Commission) படி, லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56900 வரை உள்ளது. அடிப்படை சம்பளமான ரூ .18,000 இல் 28% என்ற விகிதத்தில், மாதாந்திர அகவிலைப்படி ரூ .5040 ஆகும். 31% என்ற அளவில் இது ரூ .5580 ஆக அதிகரிக்கும். அதன்படி, ஆண்டு ஊதிய உயர்வு ரூ. 6480 ஆக இருக்கும்.

ஊதிய உயர்வின் கணக்கீடு
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம்: ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%): மாதம் ரூ .5580
3. இப்போது இருக்கும் அகவிலைப்படி (28%): மாதம் ரூ. 5040
4. அதிகரித்த அகவிலைப்படி: 5580-5040 = மாதம் ரூ. 540
5. ஆண்டு சம்பளத்தில் அதிகரிப்பு: 540X12 = ரூ 6480 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
இப்போது இதே கணக்கீட்டை லெவல்-1-ன் அதிகபட்ச அடிப்படை சம்பளம் (ரூ .56900 ) கொண்ட ஊழியர்களுக்கு பார்க்கலாம் 

31% DA -வில் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம்: ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (31%): மாதம் ரூ.17639
3. இப்போது இருக்கும் அகவிலைப்படி (28%): மாதம் ரூ. 15932 
4. அதிகரித்த அகவிலைப்படி: 17639-15932 = மாதம் ரூ 1707
5. ஆண்டு சம்பளத்தில் அதிகரிப்பு: 1707X12 = ரூ 20484 

அதாவது, ஒரு ஆண்டுக்கான ஊதிய உயர்வு ரூ. 20,484 ஆக இருக்கும். எனினும், இதில் HRA சேர்க்கப்படவில்லை. HRA ஐ சேர்த்த பின்னரே இறுதிச் சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: HBA திட்டத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News