கர்நாடகா அரசின் அகவிலைப்படி உயர்வின் சமீபத்திய அப்டேட்: நீண்ட நாட்களாக அகவிலைப்படி உயர்வு  (DA Hike) கோரி வந்த கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தற்போது அம்மாநில அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படியை 3.75 சதவீதம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு, மாநிலத்தில் ஊழியர்களின் டிஏ 38.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பு இங்குள்ள ஊழியர்களின் டிஏ 35 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அரசு தரப்பில் இருந்து யுஜிசி/ஏஐசிடிஇ/ஐசிஏஆர் (UGC/AICTE/ICAR) அளவிலான விரிவுரையாளர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) நான்கு சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1,109 கோடி கூடுதல் சுமை:
அகவிலைப்படி (7th Pay Commission DA Hike) உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, மாநில அரசுக்கு ரூ.1,109 கோடி கூடுதல் சுமை ஏற்படும். மார்ச் மாதத்தில் ஊழியர் சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு, முந்தைய பாஜக அரசு அடிப்படை சம்பளத்தில் 17% வரை இடைக்கால உயர்வு பற்றி பேசியது. இதற்குப் பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ் - Old Pension Scheme) மறுசீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தது. இதனுடன் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படியில் புதிய டுவிஸ்ட், இதோ அப்டேட்


உத்தரப்பிரதேச அரசும் அகவிலைப்படியை உயர்த்தியது:
பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (Dearness Allowances) அல்லது அகவிலை நிவாரணம் (டிஏ/டிஆர்) 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனுடன், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, உ.பி. அரசும் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. இதனிடையே உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையை அக்டோபர் மாத சம்பளத்துடன் தீபாவளிக்கு முன் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் (Tamil Nadu Employees) ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் என ஊழியர்கள் கடும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனுடையே, தீபாவளி போனசாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் எனவும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.


முன்னதாக கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு தற்போது மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலனை மாநில ஊழியர்களுக்கும் வழங்க தயாராகி வருகிறது.


அடிப்படை சம்பள கணக்கீடு:
மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளதால், அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இந்த கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம். 


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்


புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640.


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ரூ.10288+10288+10288=30864 நிலுவைத் தொகை கிடைக்கும்.. எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ