7வது ஊதியக் கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசு கிடைத்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அது முறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பு இருக்காது. ஊடக அறிக்கைகளும் வெளியிடப்படாது. இந்த முறை மோடி அரசு சார்பில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து அகவிலைப்படி தற்போது மொத்தத்தில் 42% ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐசிபிஐ-ஐடபிள்யு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பணவீக்கத்தைக் கணக்கிட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இது திருத்தப்படுகிறது. புதிய அகவிலைப்படி ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரிக்கு முன், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக இருந்தது. 


4% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல்


மோடி அரசாங்கத்தின் அமைச்சரவை புதன்கிழமை அகவிலைப்படி புள்ளிவிவரங்களை மதிப்பாய்வு செய்தது. ஆனால் முறையான ஒப்புதல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதை 42 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியே இதை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். ஹோலிக்குப் பிறகு, நிதி அமைச்சகம் அதை அறிவிக்கும். 


மேலும் படிக்க | DA Hike: மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு 42% DA உயர்வு?


அறிவிப்பு வெளியான பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடங்கும். மார்ச் மாத சம்பளத்துடன், புதிய அகவிலைப்படியும் வழங்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் சில ஊழியர்களின் சம்பள உயர்வு ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.


இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்


அகவிலைப்படி உயர்வு குறித்து நிதி அமைச்சகம் அறிவித்தவுடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கிடைக்கத் தொடங்கும். இது மார்ச் மாத சம்பளத்தில் வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால், 4% அதிகரிப்புடன், அகவிலைப்படி (DA) ஜனவரி 2023 முதல் பொருந்தும் என்று கருதப்படும். இந்நிலையில், ஊழியர்களுக்கு 2 மாத டிஏ ஏரியர் கிடைக்கும். பே பேண்ட் 3 இன் மொத்த அதிகரிப்பு மாதத்திற்கு ரூ.720 ஆக இருக்கும். அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகையாக 720X2=1440 ரூபாய் கிடைக்கும். இந்த உயர்வு அடிப்படை சம்பளத்தில் இருக்கும்.


அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தைக் கணக்கிடுகிறது. இதற்காக, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது. தொழிலாளர் பணியகம் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு ஜூலை 2022 இல் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. தற்போது அது மீண்டும் 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 31, 2023 அன்று வெளியிடப்பட்ட CPI-IW தரவுகளின்படி, அகவிலைப்படியில் 4.23% அதிகரிப்பு இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது ரவுண்டாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எனவே இது 4% ஆக இருக்கும்.


ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு அரசு ஹோலி பண்டிகைக்கான பரிசுகளையும் வழங்கியுள்ளது. அகவிலைப்படி உயர்வுடன், அகவிலை நிவாரணம் 4% அதிகரித்துள்ளது. அதாவது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 42% வீதம் அகவிலைப்படி வழங்கப்படும். மொத்தத்தில், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாத சம்பளத்தை மோடி அரசு உயர்த்தியுள்ளது.


மேலும் படிக்க | 8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ