மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சியான கிடைக்கப்போகிறது. அதாவது அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு மிகப்பெரிய முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவினை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவைலைப்படியை வழங்கி வருகிறது, எதிர்பார்த்தபடி அரசு அகவிலைப்படியை உயர்த்தும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் போன்றவற்றை உயர்த்துவது மட்டுமின்றி மத்திய அரசு இதுவரை நிலையிலுள்ள 18 மாத அகவிலைப்படியை பற்றியும் பரிசீலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து பரிசீலிக்க மாட்டோம் என அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், வரும் நாட்களில் இதுகுறித்த பரிசீலனை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவையிலுள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 4 சதவீத அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் பொருந்தும். பொதுவாக ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படியில் ஒரு வருடத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என இரண்டு தடவைகள் உயர்த்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தியமைக்கப்பட வேண்டும் எனும் காரணத்திற்காக, அரசாங்கம் அரையாண்டு அடிப்படையில் அதிகரிக்கிறது. இந்த ஆண்டில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் செய்யப்படும் முதல் திருத்தும் ஹோலி பண்டிகை சமயத்திலும், இரண்டாவதாக நவராத்திரி பண்டிகை சமயத்திலும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்! எவ்வளவு தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ