7th Pay Commission: 3% டிஏ உயர்வுக்குப் பிறகு ஊதியம் எவ்வளவு ஊயரும்? கணக்கீடு இதோ
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். இந்த பதிவில் மாதாந்திர மற்றும் வருடாந்திர சம்பள உயர்வை கணக்கிட்டுள்ளோம்.
7th Pay Commission latest news: தீபாவளி பண்டிகைக்கு முன், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்துள்ளது. தீபாவளிக்கு சற்று முன்பு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாத சம்பளத்தில் வரவு வைக்கப்படும். மொத்தம் 31 சதவீத டிஏ வழங்கப்படும்.
இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். இந்த பதிவில் மாதாந்திர மற்றும் வருடாந்திர சம்பளத்தை கணக்கிட்டுள்ளோம். எனினும், இது ஒரு பொதுப்படையான கணக்கீடாகும். இதனுடன் மற்ற கொடுப்பனவுகள் சேர்க்கப்பட்டால், கணக்கீடு சற்று வித்தியாசமாக இருக்கக்கூடும்.
அகவிலைப்படி 3% அதிகரித்து 31% ஆகியுள்ளது
ஜூலை 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, ஜனவரி 2021 க்கான அகவிலைப்படி ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் அகவிலைப்படி முடக்கப்பட்டது. இதற்குப் பிறகு, ஜூலை 2021 இல், அகவிலைப்படி 11 சதவீதம் ஒரே நேரத்தில் அதிகரிக்கப்பட்டது.
இப்போது அது மீண்டும் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அகவிலைப்படி 31 சதவீதமாகிவிட்டது. JCM செயலாளர் (ஊழியர் பக்கம்) ஷிவ் கோபால் மிஸ்ராவின் கருத்துப்படி, இது நிச்சயமாக அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகையும் சம்பளத்தில் சேரும்
அகவிலைப்படி 3% அதிகரித்தவுடன் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
7 வது ஊதியக் குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசின் லெவல் 1 ஊழியர்களின் ஊதிய வரம்பு குறைந்தபட்சமாக ரூ .18,000 முதல் அதிகபட்சமாக ரூ .56,900 வரை இருக்கும். ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்ததால், மொத்த அகவிலைப்படி 31 % ஆக ஏற்றம் பெற்றுள்ளது.
31% அகவிலைப்படியில் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (28%) - ரூ. 5040/மாதம்
4. உதவித்தொகையில் அதிகரிப்பு - 5580-5040 = ரூ. 540/மாதம்
5. ஒரு ஆண்டுக்கான ஊதிய அதிகரிப்பு - 540X12 = ரூ 6480
அதாவது ஊழியர்களுக்கு (Central Government Employees), முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது அடுத்த மாத சம்பளத்தில் ரூ.540 சேர்த்து கிடைக்கும். ஓர் ஆண்டுக்கு பார்க்கும்போது இந்த ஊதிய அதிகரிப்பு ரூ.6480 ஆக இருக்கும்.
அதிக ஊதிய வரம்பில் ஊதியம் மேலும் அதிகரிக்கும்
லெவல்-1 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900-ல் கணக்கீடு இதோ.
31% அகவிலைப்படியில் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .17,639 /மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (28%) - ரூ. 15,932/மாதம்
4. உதவித்தொகையில் அதிகரிப்பு - 17639-15932 = 1,707/மாதம்
5. ஒரு ஆண்டுக்கான ஊதிய அதிகரிப்பு - 1707X12= ரூ.20,484
அதாவது இந்த மாதம் ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.1,707 அதிகமாக வரும். ஆண்டு அடிப்படையில், இந்த வித்தியாசம் ரூ.20,484 ஆக இருக்கும்.
கணக்கீட்டில் அகவிலைப்படி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, HRA சேர்க்கப்படவில்லை
31 சதவீத அகவிலைப்படியின் படி, ரூ .56,900 என்ற அடிப்படை சம்பளத்தில் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .211,668 ஆகும். தற்போதைய விகிதமான 28 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த வித்தியாசம் ஆண்டுக்கு ரூ.20,484 ஆக இருக்கும். எனினும், முழுமையான ஊதிய அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது வீட்டு வாடகை கொடுப்பனவு உட்பட பிற கொடுப்பனவுகளும் சேர்க்கப்பட்ட பின்னர் தெரிய வரும்.
ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR