இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால், டாடாக்கள், பிர்லாக்கள் போன்ற தொழிலதிபர்களின் பெயர்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும்.  உலகளவில் பெரிய பணக்காரர் யார், இந்தியளவில் பெரிய பணக்காரர் யார் என்பது குறித்து பலரும் தெரிந்து வைத்திருக்கிறோம்.  இப்போதுதான் மிகப்பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்களா என்று நினைத்தால் நிச்சயமாக இல்லை, காலனித்துவ ஆட்சியிலிருந்து நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருந்து வந்தனர்.  இவ்வாறு வசதிபடைத்த மன்னர்களில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இருக்கிறார், அதுவும் ஒரு இந்தியர் அந்த காலத்திலேயே மிகப்பெரிய செல்வந்தர் பட்டியலை முதலிடம் வகிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இப்படிலாம் திருமணம் நடைபெறுமா?


1911 முதல் 1948 வரை 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் தான் அனைவரையும் விட மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.  1948 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக அமைப்பிற்குள் சமஸ்தானம் எடுக்கப்படுவதற்கு முன்பு ஹைதராபாத் கடைசி நிஜாம், மிர் உஸ்மான் அலி கான் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பணக்காரராக திகழ்ந்தார்.  இவர் ஆகஸ்ட் 29, 1911-ல் அவரது தந்தைக்குப் பிறகு ஹைதராபாத் நிஜாமாக தனது 25 வயதில் பதவியேற்றார், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தலைவராக இருந்தார்.  இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்று உருது, பாரசீகம், அரபி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேசுவதில் வல்லவராக திகழ்ந்தார்.  



கடந்த ஆண்டின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, மீர் உஸ்மான் அலி கானின் பணத்தின் இன்றைய மதிப்பு ரூ. 17.47 லட்சம் கோடியாக ($230 பில்லியன் அல்லது ரூ. 1,74,79,55,15,00,000.00) இருக்கும்.  இது தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு $250 பில்லியனுக்கு அருகில் உள்ளது.  நிஜாம் பேப்பர்வெயிட் வைப்பதற்கு பதிலாக வைரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, இவர் அதிகம் ஆடம்பரமான பரிசுகளை விரும்புபவர்.  பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்தின் திருமணத்திற்கு வைர நகைகளை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.  மேலும் இவர் சொந்தமாக 1941-ல் ஹைதராபாத் ஸ்டேட் வங்கியை தொடங்கினார்.  அதுமட்டுமல்லாது உஸ்மானியா பல்கலைக்கழகம், உஸ்மானியா பொது மருத்துவமனை, பேகம்பேட் விமான நிலையம், ஹைதராபாத் உயர்நீதிமன்றம், உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற இரண்டு நீர் தேக்கங்களும் இவரது ஆட்சியின் பொது கட்டப்பட்டதாகும். 



இவரை ஹைதராபாத்தின் 'நவீன கட்டிட கலைஞர்' என்று மக்கள் போற்றி புகழ்ந்தனர்.  நிஜாமின் 37 வருட ஆட்சிக்காலத்தில் தான் ஹைதராபாத்தில் மின்சாரம், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் ஆகியவை கொண்டு வரப்பட்டது.  கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு இவர் ஜாமியா நிஜாமியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் போன்ற சில முன்னணி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு நன்கொடை அளித்துள்ளார்.


மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி, இனி இந்த வசதியும் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR