Aadhaar Card News: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவும்
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு அவசியமான ஆவணமாகும். இது ஒரு தனிநபரின் அனைத்து முக்கிய தகவல்களையும் கொண்டுள்ளது. ஆகையால் இதில் பலவித மோசடிகள் நடக்கவும் பல வாய்ப்புகள் உள்ளன.
Aadhaar Card News: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு அவசியமான ஆவணமாகும். இது ஒரு தனிநபரின் அனைத்து முக்கிய தகவல்களையும் கொண்டுள்ளது. ஆகையால் இதில் பலவித மோசடிகள் நடக்கவும் பல வாய்ப்புகள் உள்ளன.
இதுபோன்ற மோசடிகளை தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் ஆதார் எண் (Aadhaar Number)அல்ல என்று யுஐடிஏஐ முன்பு ட்வீட் செய்திருந்தது. அடையாளத்தின் சான்றாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அந்த எண்ணை அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக சில விதிகளை பின்பற்றினால், எந்தவொரு மோசடியையும் ஒருவர் தவிர்க்க முடியும் என்பதையும் பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மோசடிகளிலிருந்து உங்கள் ஆதார் அட்டையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இதோ:
1) பொது கணினிகளில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் தொடர்பான அனைத்து தரவுகளையும் டெலீட் செய்ய மறக்காதீர்கள்.
ALSO READ: Aadhaar Card: ஆதார் அட்டை தொடர்பான இந்த இரண்டு சேவைகளையும் UIDAI நிறுத்தியுள்ளது
2) எந்த சூழ்நிலையிலும் உங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) யாருடனும் பகிர வேண்டாம்.
3) மற்றவர்கள் தங்கள் மொபைல் எண்களை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க அனுமதிக்காதீர்கள்.
4) மாஸ்க்ட் ஆதார் (Masked Aadhaar) அல்லது மெய்நிகர் ஐடியை (VID) பயன்படுத்துங்கள். இது ஆதார் எண்ணுடன் பொருத்தப்பட்டுள்ள தற்காலிக சீரற்ற 16 இலக்க ஆதார் எண்ணாகும். நீங்கள் அங்கீகாரம் அளிக்க வெண்டிய நேரங்களிலும் மின்-கே.ஒய்.சி சேவையை பயன்படுத்த வேண்டிய நேரங்களிலும் ஆதார் எண்ணின் இடத்தில் இதைப் பயன்படுத்தலாம். இதில் ஏற்படும் நன்மை என்னவென்றால், VID-யிலிருந்து ஆதார் எண்ணை யாராலும் எடுக்க முடியாது.
5) உங்கள் பயோமெட்ரிக்ஸை லாக் செய்து வைக்கவும். இதை UIDAI தளம் மூலம் செய்ய முடியும். பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் மூலம் இதை அன்லாக் செய்து கொள்ளலாம்.
6) உங்கள் ஆதார் அங்கீகார ஹிஸ்டரியை (Aadhaar authentication history ) அவ்வப்போது தவறாமல் சரிபார்க்கவும். இப்படி செய்வதன் மூலம், உங்கள் ஆதார் எண் மோசடிக்கு உள்ளாகியிருந்தால், அதை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR