Aadhaar Card Latest News: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்: ட்வீட் செய்த UIDAI

ஆதார் அட்டை குறித்து ஒரு பெரிய, முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது. இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவது எளிதாகிவிட்டது. UIDAI, eaadhaar.uidai.gov.in என்ற நேரடி இணைப்பைப் பகிர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 02:37 PM IST
  • இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவது எளிதாகிவிட்டது.
  • UIDAI, eaadhaar.uidai.gov.in என்ற நேரடி இணைப்பைப் பகிர்ந்துள்ளது
  • யுஐடிஏஐ சமீபத்தில் ஆதார் அட்டையின் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது.
Aadhaar Card Latest News: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்: ட்வீட் செய்த UIDAI title=

Aadhaar Card Update: ஆதார் அட்டை குறித்து ஒரு பெரிய, முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது. இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவது எளிதாகிவிட்டது. இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) eaadhaar.uidai.gov.in என்ற நேரடி இணைப்பைப் பகிர்ந்துள்ளது. இதை கிளிக் செய்து நீங்கள் ஆதார் அட்டையை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதன் மூலம், எப்போதும் ஆதாரை உங்களுடன் எடுத்துச்செல்வது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

UIDAI ட்வீட் செய்தது

UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்து, இந்த வசதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. ஆதார் தற்போது இந்தியாவில், இந்திய குடிமக்களுக்கான அடையாளத்தின் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கிகள் தொடர்பான பணிகளோ அல்லது அரசு திட்டங்களின் மூலம் அடையும் நன்மைகளோ, அனைத்துக்கும் நமக்கு ஆதார் அட்டை தேவைப்படுகின்றது. 

ஆதார் அட்டையை (Aadhaar Card) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்பைப் பகிர்ந்த யுஐடிஏஐ, 'உங்கள் ஆதாரை எப்போது வேண்டுமானாலும் https://eaadhaar.uidai.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதை பதிவிறக்கம் செய்யும் முறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்' என ட்வீட் செய்துள்ளது. 

ALSO READ: Aadhaar Card Language Update: தமிழ் மொழியில் ஆதார் அட்டை பெற எளிய செயல்முறை இதோ 

இந்த வழியில் பதிவிறக்கம் செய்யவும்

ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் (Aadhaar Download) செய்ய, நீங்கள் UIDAI வழங்கிய நேரடி இணைப்பான eaadhaar.uidai.gov.in/ -ல் லாக் இன் செய்ய வேண்டும். இதன் பிறகு OTP கொண்டு லாக் இன் செய்யவும். லாக் இன் செய்த பின்னர், சில வழிமுறைகளைப் பின்பற்றி ஆதாரைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

1. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யவும்
2. UIDAI நேரடி இணைப்பான eaadhaar.uidai.gov.in/-ல் லாக் இன் செய்யவும்.
3. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4. நீங்கள் மாஸ்க்ட் ஆதார் அட்டையை பெற விரும்பினால், 'I want a Masked Aadhaar' என்ற விருப்பத்தின் இடதுபுறத்தில் உள்ள பாக்சில் டிக் செய்யவும். 
5. பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சாவை உள்ளிடவும்.
6. 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
7. உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
8. OTP ஐ உள்ளிடவும்.
9. OTP சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் ஆதார் பதிவிறக்குவதற்கான விருப்பம் ஆகியவை உங்கள் கணினி மானிட்டர் அல்லது மொபைல் போனின் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும்.
10. பதிவிறக்கும் விருப்பத்தை கிளிக் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக இதை சேவ் செய்து வைத்துக்கொள்ளவும். 

மாஸ்க்ட் ஆதார் அட்டை

யுஐடிஏஐ சமீபத்தில் ஆதார் அட்டையின் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இது Masked Aadhaar என்று அழைக்கப்படுகின்றது. ஆதார் அட்டையில் 12 இலக்கங்கள் இருக்கும். ஆனால் இந்த மாஸ்க்ட் ஆதாரின் உதவியால், நீங்கள் ஆதாரின் முதல் 8 இலக்கங்களை மறைக்க முடியும். அதாவது, மாஸ்க்ட் ஆதாரில், அத்தியாவசியமான கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும்.

ALSO READ: Aadhaar Photo Change: ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய செயல்முறை இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News