ஆதார் அட்டையில் 4 வகைகள் உள்ளன: ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம்
Aadhaar Card: ஆதார் அட்டை இல்லாமல் எந்த பணியையும் செய்வது கடினம். ஆதார் அட்டை மற்ற அடையாளச் சான்றுகளிலிருந்து வேறுபட்டது.
ஆதார் அட்டையின் பல்வேறு வகைகள்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் அட்டை இல்லாமல் எந்த பணியையும் செய்வது கடினம். ஆதார் அட்டை மற்ற அடையாளச் சான்றுகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அதில் நாட்டு மக்கள் அனைவரின் பயோமெட்ரிக் தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைச் செய்ய, அனைவரது கைரேகைகள் மற்றும் கண்களின் விழித்திரை ஸ்கேன் செய்யப்படுகிறது. ஆகையால், இதன் பிரத்யேக அம்சம் காரணமாக ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற பிற அடையாளச் சான்றுகளிலிருந்து இது மிகவும் வேறுபட்டது.
குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க, வங்கி கணக்கு தொடங்க, பயணத்தின் போது, ஹோட்டல் முன்பதிவு செய்ய, சொத்து வாங்க, சந்தையில் முதலீடு செய்ய என பல இடங்களில் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில், அட்டைதாரரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதார் அட்டை யுஐடிஏஐ-ஆல் வழங்கப்படுகிறது.
குடிமக்களின் வசதிக்காக, பல வகையான ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அனைத்து ஆதார் அட்டைகளும் ஒரே தனித்துவமான அடையாள எண்ணைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையின் வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
1. ஆதார் லெட்டர்
ஆதார் லெட்டர் அனைவரது வீட்டு முகவரிக்கும் யுஐடிஏஐ மூலம் அனுப்பப்படுகிறது. இது ஒரு தடிமனான ஆதார் அட்டையாகும். இதில் நமது தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யுஐடிஏஐ எந்த கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையை உருவாக்கிய பிறகு இந்த ஆதார் அட்டையை வீட்டு முகவரிக்கு அனுப்புகிறது. இந்த அட்டையில் ஆதார் அட்டை வைத்திருப்பவரின் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Aadhaar Update: உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ
2. mAadhaar அட்டை
mAadhaar மொபைல் ஆப் ஒரு மொபைல் செயலி ஆகும். இதன் மூலம் ஆதார் அட்டை மென் நகல் (சாஃப்ட் காப்பி) வடிவத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில், ஆதார் விவரங்களை நிரப்பி ஆதாரை சேவ் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையில் எந்த விதமான அப்டேட் செய்தாலும், MAadhaar கார்டு தானாகவே புதுப்பிக்கப்படும். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
3. பிவிசி ஆதார் அட்டை
பிவிசி ஆதார் அட்டை ஒரு கிரெடிட் கார்டு போல் இருக்கும். இந்த ஆதார் அட்டை ஸ்பெஷல் ஆர்டர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் டிஜிட்டல் க்யூஆர் குறியீடும் உள்ளது. அதில் உங்களின் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.50 செலுத்தி இந்த கார்டை ஆர்டர் செய்யலாம். இந்த அட்டையின் சிறப்பம்சம் என்னவென்றால், இது கிழியாது, நீர் பட்டாலும் நனைந்து பாதிக்கப்படாது.
4. மின் ஆதார் அட்டை
இ-ஆதார் என்பது ஆதார் அட்டையின் மின்னணு வடிவமாகும். இந்த கார்டில் பாதுகாப்பான க்யூஆர் குறியீடு உள்ளது. அதை நீங்கள் ஸ்கேன் செய்து அனைத்து தகவல்களையும் குறிப்பிடலாம். கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதால், இந்தக் கார்டைத் திறக்க கடவுச்சொல் தேவை. ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க யுஐடிஏஐ மாஸ்க்ட் மின்-ஆதார் அட்டையையும் (மாஸ்க்ட் இ ஆதார் கார்ட்) வழங்குகிறது. இந்த அட்டையில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் ஆதார் அட்டையின் தகவல்கள் திருடப்படாமல் இருக்க இது உதவும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கவும்; எளிமையான செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR