Aadhaar Card Latest News: ஆதார் அட்டை தொடர்பாக UIDAI ஒரு பெரிய அப்டேட்டை அளித்துள்ளது. ஆதார் அட்டையை இழந்துவிட்டால், இனி அதிக பிரச்சனைகளை சந்திக்கத்  தேவையில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது ஆன்லைனில் ஆதார் (Aadhaar) பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தத் தகவலை அளித்துள்ளது. மேலும் ஆதார் அட்டையை எங்கு வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில், கிளிக் செய்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளது.


UIDAI ட்வீட் செய்தது


UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்து இந்த வசதி பற்றிய தகவலை அளித்துள்ளது. இந்தியாவில், ஆதார் தற்போது நமது அடையாளத்தின் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி சார்ந்த பணிகள் அல்லது அரசுத் திட்டத்தைப் பயன்படுத்த ஆதார் அட்டை தேவையாக உள்ளது. ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொண்டால், ஆதை பிசிக்கலாக நம்முடனேயே வைத்திருகக் வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆதார் அட்டை தொலைந்து போகும் அல்லது சேதமடையும் பிரச்சனைகளிலிருந்தும் தீர்வு காணலாம்.


ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்பைப் பகிர்ந்துகொண்ட UIDAI, 'https://eaadhaar.uidai.gov.in இலிருந்து எந்த நேரத்திலும் உங்கள் ஆதார் பதிவிறக்கம் செய்யுங்கள். நீங்கள் 'வழக்கமான அடிப்படையில்' பதிவிறக்கும் ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம்.’ என கூறியுள்ளது.


ALSO READ:Aadhaar-ல் 2 முக்கிய சேவைகளை நிறுத்தியது UIDAI: வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சிக்கல்


இந்த வழியில் பதிவிறக்கம் செய்யலாம்


ஆதார் அட்டையை (Aadhaar Card) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, UIDAI - வழங்கிய நேரடி இணைப்பான eaadhaar.uidai.gov.in/ -ல் நீங்கள் லாக் இன் செய்ய வேண்டும். அதன் பிறகு OTP மூலம் உள்நுழையலாம். அதன்பிறகு சில வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் ஆதார் அட்டையை தரவிறக்கம் செய்யலாம்.


ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறை இதோ:


1. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
2. UIDAI-யின் நேரடி இணைப்பான eaadhaar.uidai.gov.in/ இல் லாக் இன் செய்யவும்.
3. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4. உங்களுக்கு மாஸ்க்ட் ஆதார் அட்டை வேண்டுமானால், 'I want a masked Aadhaar' என்ற விருப்பத்தின் இடதுபுறத்தில் உள்ள பெட்டியை டிக் செய்யவும்.
5. பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சாவை உள்ளிடவும்.
6. 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
7. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
8. OTP ஐ உள்ளிடவும்.
9. OTP சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் ஆதார் பதிவிறக்க விருப்பம் உங்கள் கணினி மானிட்டர் அல்லது மொபைல் போனில் காட்டப்படும்.
11. பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்து எதிர்கால குறிப்புக்காக சேவ் செய்து வைத்துக் கொள்ளவும்.


ALSO READ: Aadhaar எச்சரிக்கை: உங்கள் ஆதார் அட்டை போலியா? அசலா? எப்படி சரிபார்ப்பது? வழிமுறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR