தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் எண் கட்டாயம் இல்லை என தேசிய நுழைவுத் தேர்வு ஆணையம் (NTA) தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பின் படி வரவிருக்கும் JEE மற்றும் NET தேர்வுகளுக்கு ஆன்லைன்னில் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணினை அளிப்பது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது. எனினும் தேர்வாளர்கள் தங்களது பாஸ்போர்ட் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு எண் அல்லது ஏதேனும் பிற செல்லுபடியாகும் அரசாங்க அடையாள எண் போன்ற பிற ஐடிகளை வழங்க வேண்டும் எனவும் அறிவித்துளது. 


இந்த அறிவிப்பானது UGC NET செப்டம்பர் 2018 இன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் போது இந்த வினவல் எழுந்துள்ளது. இந்த வினவலுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பினை NTA வெளியிட்டுள்ளது, இந்த அறிவிப்பின் படி, "ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, ​​அடையாளம் காணும் வகையைப் பொருத்து, வேட்பாளர்கள் ஏதேனும் ஒரு அரசாங்க அடையாள எண் போன்ற பிற ஐடிகளை வழங்க வேண்டும், அதன்படி ஏதேனுன் ஒரு அட்டையின் எண்ணை வழங்கினால் போதும், ஆதார் என்பது கட்டாயமாக்கப்படாது.


செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தாண்டிற்கான JEE மற்றும் UGC NET தேர்விற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு தேர்வுகளும் வருடம் இரண்டு முறை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


NET தேர்வு ஆனது உதவி பேராசிரியர் மற்றும் துணை ஆராய்ச்சியாளர் இடங்களுக்காக நடத்தப்படுகிறது. JEE Mains தேர்வு ஆனது இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்), இளங்கலை பொறியியல் (BE) மற்றும் இளங்கலை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (பி.இ.ஆர்) படிப்புகள் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.க்கள்) மற்றும் இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் இணைவதற்கான நுழைவு தேர்வுகள் ஆகும்.