Aadhaar புதிய அம்சம்: ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் பல பணிகளை செய்து முடிக்கலாம்
ஆதார் தொடர்பான சில சேவைகளை யுஐடிஏஐ தொடங்கியுள்ளது. அந்த சேவைகளை நீங்கள் எஸ்எம்எஸ் மூலமும் பெற முடியும்.
Aadhaar Card News: நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இணைய சேவை உள்ளது. ஸ்மார்ட்போன்களும் மலிவான தரவு வசதியுடன் கூடிய இணைப்புகளும் இப்போது அனைவரிடமும் உள்ளன. அனைத்து வித தகவல்களையும் அனைவரும் நொடிகளில் பெற்று விடுகிறார்கள்.
எனினும், இப்படி ஒரு சூழலிலும் இணையத்தைப் பற்றி அதிகம் தெரியாத மக்களும் இன்னும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். அத்தகையவர்களுக்கு யுஐடிஏஐ பல வசதிகளை வழங்குகிறது.
UIDAI இன் புதிய எஸ்எம்எஸ் வசதி
ஆதார் தொடர்பான சில சேவைகளை யுஐடிஏஐ (UIDAI) தொடங்கியுள்ளது. அந்த சேவைகளை நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும். இதற்காக நீங்கள் இணையத்தின் UIDAI வலைத்தளத்தைத் திறக்கவோ அல்லது ஆதார் செயலியை பதிவிறக்கவோ தேவையில்லை. இதற்கு ஸ்மார்ட்போனும் தேவையில்லை. இணைய வசதி இல்லாத எளிய அம்ச தொலைபேசியிலிருந்தும் எவரும் இந்த சேவைகளைப் பெற முடியும்.
இந்த சேவையின் மூலம், பயனர்கள் மெய்நிகர் ஐடியின் (VID) ஜெனரேஷன் அல்லது மீட்டெடுப்பு, தங்கள் ஆதாரை லாக் அல்லது அன்லாக் செய்தல், பயோமெட்ரிக் லாக் அல்லது அன்லாக் செய்தல் போன்ற பல சேவைகளைப் பெறலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து 1947 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ்-ஐ அனுப்ப வேண்டும்.
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஆதார் (Aadhaar Card) தொடர்பான சேவைகளை எவ்வாறு பெறுவது என்பதைப் தெரிந்துகொள்வோம்.
Virtual ID-யை எவ்வாறு உருவாக்குவது
வர்சுவல் ஐடி-யை உருவாக்க, மொபைலின் மெசேஜ் பாக்சிற்குச் சென்று GVID (SPACE) மற்றும் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட்டு 1947 க்கு அனுப்பவும்.
உங்கள் VID ஐப் பெற, RVID (SPACE) எனத் தட்டச்சு செய்து, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்.
நீங்கள் இரண்டு வழிகளில் OTP ஐப் பெறலாம். முதலில் உங்கள் ஆதார் எண் மூலம், இரண்டாவது உங்கள் VID மூலம்.
ஆதார் மூலம் OTP பெற: GETOTP (SPACE) மற்றும் உங்கள் ஆதாரின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்.
VID மூலம் OTP பெற: GETOTP (SPACE) மற்றும் உங்கள் அதிகாரப்பூர்வ வர்சுவல் ஐடி-யின் கடைசி 6 இலக்கங்களை SMS இல் உள்ளிடவும்.
ALSO READ:Aadhaar Card News: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவும்
ஆதாரை லாக் மற்றும் அன்லாக் செய்ய
ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் உங்கள் ஆதாரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். இதன் நன்மை என்னவென்றால், உங்கள் ஆதாரை எந்த நபரும் தவறாக பயன்படுத்த முடியாது. நீங்கள் விரும்பும் போது அதை லாக் செய்து விடலாம். உங்கள் ஆதாரை லாக் செய்ய, நீங்கள் ஒரு விஐடி வைத்திருக்க வேண்டும்.
SMS மூலம் லாக் செய்யும் செயல்முறை
1. முதலில் எஸ்எம்எஸ்-ல் மூலம் TEXT-ல் சென்று GETOTP (SPACE) மற்றும் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்.
2. இரண்டாவது, OTP கிடைத்த உடனேயே SMS அனுப்பப்பட வேண்டும்.
3.LOCKUID (SPACE) உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் (SPACE) 6 இலக்கங்கள் கொண்ட OTP ஐ உள்ளிடவும்.
எஸ்எம்எஸ் வழியாக அன்லாக் செய்யும் செயல்முறை
1: எஸ்எம்எஸ்-க்கு சென்று GETOTP (SPACE) என தட்டச்சு செய்து உங்கள் VID இன் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும்.
2: மற்றொரு எஸ்எம்எஸ் அனுப்பவும். அதில், UNLOCK (SPACE) உங்கள் விஐடியின் கடைசி 6 இலக்கங்கள் (SPACE) 6 இலக்க OTP ஐ உள்ளிடவும்.
ALSO READ: Aadhaar Card: ஆதார் அட்டை தொடர்பான இந்த இரண்டு சேவைகளையும் UIDAI நிறுத்தியுள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR