ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கவில்லை என்றால், கண்டிப்பாக மார்ச் 31க்கு முன் செய்துவிடுங்கள், இல்லையெனில் அதற்குப் பிறகு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபராதம் செலுத்தி மார்ச் 31க்குப் பிறகும் இணைக்கலாம்


ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, ஆனால் இதற்குப் பிறகும் அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கலாம். மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகும் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம், ஆனால் அதற்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டும் என்று CBDTஅறிவிப்பை வெளியிட்டது.


மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!!


மார்ச் 31க்குப் பிறகு 3 மாதங்களுக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். மறுபுறம், ஆதார் மற்றும் பான் அட்டையை 3 மாதங்களில் அதாவது ஜூன் வரை இணைக்கவில்லை என்றால், 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.


பான் மற்றும் ஆதாரை ஆன்லைனில்  இணைப்பது எப்படி: 


1. பான்-ஆதாரை இணைக்க வருமான வரி மின்-தாக்கல் இணையதளத்தைப் பார்வையிடவும்.


2. தளத்தின் இடது பக்கத்தில், Quick Links என்ற ஆப்ஷன் இருக்கும். இங்கே நீங்கள் 'லிங்க் ஆதார்' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


3. இங்கே நீங்கள் உங்கள் PAN, ஆதார் எண் மற்றும் பெயரை உள்ளிட வேண்டும்.


4. தகவல் கொடுத்த பிறகு, உங்களுக்கு OTP அனுப்பப்படும். ஓடிபியை உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும் (ஆதார்-பான் இணைப்பு).


மேலும் படிக்க | SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR