ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!
ஆதார் - பான் எண் இணைப்புக்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், குடியுரிமை பெறாதவர்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் எண் ஏப்ரல் 01, 2023 முதல் செல்லாததாகிவிடும். இதனுடன், மக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவோ அல்லது பான் தொடர்பான சேவைகளை அணுகவோ தடை விதிக்கப்படும். அதேநேரத்தில், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவில் அரசாங்கம் தளர்வு அளித்துள்ளது. அவர்களைத் தவிர மற்ற அனைவரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் - ஆதார் எண்களை இணைத்துவிட வேண்டும். இதன்பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படாது என தெரிவித்திருக்கும் மத்திய அரசு 10000 ரூபாய் அபாரதத்துடன் மட்டுமே இனி பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பை மேற்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்
விலக்கு அளிக்கப்பட்டவர்கள் காலக்கெடுவுக்குள் பான் - ஆதார் எண் இணைப்பை மேற்கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மத்திய அரசின் உத்தரவுப்படி, அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் - பான் எண் இணைப்பு தேவையில்லை. மறுபுறம், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி, குடியுரிமை பெறாதவர்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமில்லை. இது தவிர, முந்தைய ஆண்டில் எண்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கடந்தவர்களுக்கும் இது தேவையில்லை. ஒருவர் இந்திய குடிமகனாக இல்லை என்றால் அவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?
உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அவற்றை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இணைக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். இது தவிர, வருமான வரி இணையதளத்திற்குச் சென்று, பொருந்தக்கூடிய தாமதக் கட்டணம் அல்லது ரூபாய் 1000 செலுத்துவதன் மூலம் ஆன்லைனில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். இதனுடன், இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxindiaefiling.gov.in- என்ற இணையதளம் வழியாகவும் உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கலாம்.
மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!
மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ