பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இந்தத் தேதிக்குப் பிறகு நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. அதன்பிறகு நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலவகாசத்தை தவறவிடுபவர்கள் நிச்சயம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல் சில நடைமுறை சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். மத்திய அரசு இது குறித்து பல முறை விளக்கம் கொடுத்தும் காலவகாசத்தையும் நீட்டித்திருக்கிறது. இதுவரை செய்யாதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துவிடுங்கள்.
ஒருவேளை ஆதார் - பான் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த குழப்பம் இருந்தால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுவரை இணைக்காதவர்களும் ஆன்லைன் மூலம் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் பான் எண் செல்லாததாகிவிடும்.பான் இல்லை என்றால் வருமான வரி செலுத்துவோர் ITR-ஐ நிரப்ப முடியாது. இது மட்டுமின்றி, வங்கியில் 50,000 ரூபாய்க்குமேல் டெபாசிட் செய்ய PAN தேவை. பான் இல்லையென்றால் இதுவும் சாத்தியமில்லை.
மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்
பான் செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
* முதலில் வருமான வரி இ-ஃபைலிங் இணையதளம் incometaxindiaefiling.gov.in/home-க்குச் செல்லவும்.
* இதற்குப் பிறகு Verify Your PAN Details என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் PAN எண்ணை உள்ளிடவும்.
* அதன் பிறகு, பான் கார்டில் எழுதப்பட்ட முழு பெயரை உள்ளிடவும்.
* பக்கத்தில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்கவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் PAN செயலில் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தியை இணையதளத்தில் காண்பீர்கள்.
பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி அறிவது?
* முதலில் incometax.gov.in க்குச் செல்லவும்.
* 'ஆதார் நிலையை இணைக்கவும்' என்ற விருப்பத்தைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
* திறக்கும் புதிய விண்டோவில் View Link ஆதார் நிலையை கிளிக் செய்யவும்.
* ஆதார்-பான் இணைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஒரு செய்தி காட்டப்படும்.
* ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை என்றால், அவற்றையும் இங்கே இணைக்கலாம்.
பான் ஆதாருடன் இணைப்பது எப்படி?
வருமான வரி இணையதளத்திற்குச் சென்று ஆதார் மற்றும் பான் எண்ணை 'லிங்க் ஆதார்' வசதியுடன் இணைக்கலாம். இதற்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் லாக் இன் ஐடியை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நீங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.
மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!
மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ