ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


சமீபத்தில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி கடைசி நாள். இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, வருமானவரித் துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இது குறித்த விசாரணையின் போது ஆதார் அட்டையின் அரசியல் சாசன செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அத்தீர்ப்பு வரும் வரை வருமான வரி துறையால் வழங்கப்படும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. 


இதையடுத்து, 2018 - 2௦19 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஆதார் எண் குறிப்பிடாமல் தாக்கல் செய்ய அனுமதித்த உயர்நீதிமன்றம், ஆதார் அட்டையின் அரசியல் சாசன செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தால், அதன்பின், ஆதார் எண்ணை குறிப்பிட்டு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.