AAA JOBS: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு: 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி
இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்ஸ், இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமோ, டிரேட் அப்ரெண்டிஸ் மற்றும் பிற வேலை காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
புதுடெல்லி: இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India (AAI) ) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்ஸ் (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் இல் விண்ணப்பதாரர்களின்பணி நியமனம் வழக்கமான அடிப்படையில் இருக்கும் என்றும், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்தியாவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
AAI ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆட் சேர்ப்பு 2022க்கான விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தகுதி அளவுகோல் / கல்வித் தகுதி, வயது வரம்பு, உதவித்தொகை மற்றும் பிற தொடர்புடைய விவரங்களை தெரிந்துக் கொள்ளல்வும்.
மேலும் படிக்க | UPSC Selection Post Recruitment 2022: அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு
AAI இல் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்களுக்கான சம்பளம் / ஊதிய அளவு
AAI இல் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான CTC ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் (தோராயமாக).
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்களுக்கான ஊதிய அளவு ரூ.40000-3%-140000.
அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, சலுகைகள் @ 35% அடிப்படை ஊதியம், HRA மற்றும் CPF, கிராச்சுட்டி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், மருத்துவப் பலன்கள் போன்றவை உட்பட அனைத்து ஊதிய சலுகைகளும் AAI விதிகளின்படி ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
AAI ஆட்சேர்ப்பு 2022 இல் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்க்கான காலியிட விவரங்கள்
AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2022க்கான :
AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி /தகுதி அளவுகோல்கள்: இயற்பியல் மற்றும் கணிதத்துடன் அறிவியல் (B.Sc) மூன்றாண்டுகளுக்கான முழுநேர வழக்கமான இளங்கலைப் பட்டம். அல்லது
ஏதேனும் ஒரு துறையில் பொறியியலில் முழு நேர வழக்கமான இளங்கலை பட்டம். (இயற்பியல் & கணிதம் ஏதேனும் ஒரு செமஸ்டர் பாடத்திட்டத்தில் பாடமாக இருக்க வேண்டும்).
AAI Junior Executive Recruitment 2022க்கான வயது வரம்பு: 14.07.2022 தேதியின்படி 27 ஆண்டுகள்.
பல்வேறு பிரிவுகளுக்கு வயது தளர்வு: PWD விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC (கிரீமி லேயர் அல்லாத) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்.
இந்திய அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளின்படி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது தளர்வு பொருந்தும். வழக்கமான AAI சேவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு பத்து ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன்/இரண்டாம் நிலை தேர்வு சான்றிதழ்களில் பிறந்த தேதி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பிறந்த தேதி மாற்றங்களுக்கான எதிர்கால கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது..
இந்த ஆட்சேர்ப்புக்கான முக்கியமான தேதிகள்
AAI இல் இளைய நிர்வாகிகளுக்கான தேர்வு செயல்முறை
AAI இல் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆக தேர்வு செய்ய, விண்ணப்பதாரர்கள் அவர்களின் விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் அதற்கேற்ப அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வுக்கான அனுமதி அட்டை தகுதியான விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு பிரத்தியேகமாக அனுப்பப்படும்.
மேலும் படிக்க | OPGC Recruitment 2022: பொறியியல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு
ஆன்லைன் தேர்வை தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு, குரல் சோதனை மற்றும் பின்னணி சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். பணியமர்த்தப்படுவதற்கு முன், விண்ணப்பதாரர்கள் மனோதத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2022க்கான விண்ணப்பக் கட்டணம்
AAI ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000/- (ரூபா ஆயிரம் மட்டும்) செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.81/- தேர்வுக்கட்டணம்..
மறுபுறம், AAI இல் ஒரு வருட அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த PWD மற்றும் பயிற்சியாளர்கள், கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள். கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். பணம் செலுத்தும் வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் படிக்க | இந்திய தபால் துறையில் 38926 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe