29 ஆண்டுகளுக்கு பிறகு சூரியன் சனி சேர்க்கை, இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்
இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக இருந்தால் அது குடும்பத்தில் தந்தை மகன் இடையே பிரச்னையை ஏற்படுத்தும்.
புதுடெல்லி: இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி சூரியன் மற்றும் சனி மகர ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன் சுமார் ஒரு மாதம் சஞ்சரிப்பார். இந்த இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக உள்ளன. அதாவது சனி பகவான் பிறந்ததும் அவரை சூரியன் ஒதுக்கியதாகப் புராண கதைகள் கூறுகின்றன.
29 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பொங்கலுக்கு சூரியன் - சனி சேர்க்கை ஏற்பட் உள்ளது. அதன்படி தற்போது சூரிய - சனி கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் எப்படிப்பட்ட பலன் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) பணியிடத்தில் உயர் அதிகாரியுடன் தகராறு ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் வரும்.
ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க
ரிஷபம்: தொழிலில் வெற்றி பெறுவீர்கள், ஆனால் இதற்காக நீங்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். வெளியூர் செல்லவும் வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நிலையில் கவலை ஏற்படலாம்.
மிதுனம் (Gemini): கூட்டுத் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உடல் நலம் பாதிக்கும். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
கடகம்: காதல் உறவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையக்கூடும்.
சிம்மம்: உத்யோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். இது தவிர தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உடற்பயிற்சி செய்வது பலன் தரும்.
கன்னி (Virgo): பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்படலாம். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
துலாம்: திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் ஏற்படும். நிலம் தொடர்பான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் உடல்நிலை குறித்து அதிகம் கவனம் தேவை. தொழிலில் திடீர் மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்: வியாபாரம் தொடர்பாக வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகோதர உறவு மோசமடையலாம். ஆவணங்கள் தொடர்பான வேலைகளில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.
தனுசு: திடீர் பண ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்: பணி இடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கும்பம்: தூக்கமின்மை பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுவீர்கள். வேலைக்காக வெளியூர் செல்லலாம். மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம். தொண்டு பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்: அபரிமிதமான நிதி ஆதாயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR