Neha Dhupia Weight Loss Lifestyle Tips: பெரும்பாலும் நாம் நமது வாழ்க்கைமுறையை நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு ஏற்ற வகையில் தேர்வுசெய்வோம். உதாரணத்திற்கு நீங்கள் கல்லூரி மாணவர் என்றால், உங்களின் ஆடை தேர்வு என்பது பெரும்பாலும் நண்பர்கள் வட்டத்தின் ரசனை பொருத்து அமையும். உங்கள் நண்பர்கள் எதை அதிக அணிகிறார்களோ அதையே நீங்களும் அணிய வேண்டும் என நினைப்பீர்கள். இதேபோல் பல்வேறு விஷயங்களை சுற்றத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்துவோம். இதைபோல் பிரபலங்களின் லைஃப்ஸ்டைலையும் அதிக பின்பற்றுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இந்த காலகட்டத்தில் பலரும் தங்களின் ஃபிட்னஸ் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் இருந்தும் கற்றுக்கொள்கின்றனர். இவை ஆரோக்கியமான சூழல் இல்லையென்றாலும் சில பேருக்கு உடல்நிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாது. எனவே, நீங்கள் சமூக வலைதளங்களில் பார்க்கும், படிக்கும், தெரிந்துகொள்ளும் இதுபோன்ற விஷயங்களை முறையான நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்.


23 கிலோ எடையை குறைத்த நடிகை


இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது வாழ்க்கைமுறையில் செய்த சின்ன சின்ன மாற்றங்களால் சுமார் 23 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். நிச்சயம் இது பலருக்கும் பயன்படும். அந்த நடிகை எப்படி 23 கிலோ உடல் எடையை குறைத்தார், அவர் செய்த சின்ன சின்ன மாற்றங்கள் என்னென்ன ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம். அதற்கு முன் அந்த நடிகை யார் என்பதையும் தெரிந்துகொள்வோம். 


பிரபல பாலிவுட் நடிகையான நேஹா தூபியா (43) என்பவர்தான் சுமார் 23 கிலோ வரை உடல் எடை குறைத்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். பொதுவெளியில் தைரியமான கருத்துகளை யதார்த்தமாக பேசுவது நேஹா துப்பியாவின் வழக்கம் எனலாம். அனைத்தும் வெளிப்படையாக பேசுபவர். அந்த வகையில் அவர் தனது தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறியதையும், தனது உடல் எடையை 23 கிலோ வரை குறைத்ததையும் குறித்தும் பேசியிருந்தார்.


மேலும் படிக்க | இந்த 5 காய்கறிகளை எப்போதும் வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்..! ஏன்?


43 வயதான நடிகை...


43 வயதான நேஹா துப்பியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர் குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் தனது வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக, இரண்டு குழந்தைளை பெற்றெடுத்த பின்னர் உடல் எடை ஏற்றும், உடல் எடை குறைவு என கடும் சவால்களை அவர் உடல் ரீதியாகவும் மனநல ரீதியாகவும் சந்திருக்கிறார். அந்த சவால்களை கடந்து அவர் வெற்றிகரமாக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்திருக்கிறார். 



பிரசவத்திற்கு பின்...


வழக்கமாக குழந்தையை பெற்றெடுத்த பின்னர் தாய்மார்களுக்கு 17 கிலோ வரை எடை அதிகரிக்கும் என்பார்கள். ஆனால், நேஹா துபியாவுக்கு 23 முதல் 25 கிலோ வரை உடல் எடை அதிகரித்ததாம். ஊடகம் ஒன்றிடம் பேசும்போது அவர் கூறுகையில்,"எனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் லாக்டவுண் வந்துவிட்டது. அப்போது வீட்டில் இருந்ததால் உணவு கட்டுப்பாட்டில் இருந்தேன். அதனால் உடல் எடையும் அதற்கேற்ப குறைந்தது. இதனால், பிரசவத்திற்கு பின் அதிகமாக உடல் எடையை நான் குறைத்துவிட்டேன், அதாவது 23 கிலோ வரை எடையை குறைத்தேன். ஆனால் மீண்டும் நான் கர்ப்பமாகிவிட்டேன். எனவே இப்போது நான் எதிர்பார்த்த உடல் எடைக்கு நான் செல்லவில்லை என்றாலும் வருங்காலத்தில் அதனை நெருங்கிவிடுவேன்" என கூறினார்.


மேலும் அவரது உடல் எடை குறைப்பில் உணவுக் கட்டுப்பாடும், சரிக்குசமமான உடற்பயிற்சி குறித்தும் நேஹா குறிப்பிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், பணியில் இருக்கும் பெண்ணாகவும் இருந்ததால் முறையான கலோரிகள் சார்ந்து தன்னால் உணவை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றார். காரணம், தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் பார்த்துக்கொள்ள தனக்கு அதிக எனர்ஜி தேவைப்பட்டதாகவும், இதனால் உணவில் பெரிய கட்டுப்பாடுகளை கொண்டுவர இயலவில்லை என்றார். 


சின்ன சின்ன மாற்றங்கள்


இதனால் அவர் தனது வாழ்க்கைமுறையில் சிற்சில மாற்றங்களை மட்டும் செய்தாராம். அதாவது, அவரது உணவுமுறையில் இருந்து முழுவதுமாக சர்க்கரையை நீக்கிவிட்டாராம். சர்க்கரை சார்ந்த பொருள்களை சாப்பிடுவதில்லை என முடிவெடுத்த அவர் குளூட்டன் இருக்கும் உணவுகள் மற்றும் பொறித்த உணவுகளையும் உட்கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அவ்வப்போது ஜிம்மிற்கும் சென்றுள்ளார். 


மேலும் அன்றாட வாழ்க்கையில் ஃபிட்டாக இருக்க, ஊட்டச்சத்து நிறைந்த சமமான உணவுகளை எடுத்துக்கொண்டுள்ளார். மேலும் தனது சாப்பாட்டிற்கு என தனியாக நேரத்தையும் அவர் கடைபிடித்து வந்துள்ளார். அதாவது காலை உணவை 11 மணிக்கும் இரவு உணவை 7 மணிக்கும் சாப்பிடுவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இதுவும் உடல் எடை குறைப்பில் முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது. உடல் எடையை குறைத்தது அவருக்கு தனிப்பட்ட ரீதியிலும், தொழில் ரீதியிலும் அதிக நன்மையை ஏற்படுத்தித் தந்ததாகவும் தெரிவித்தார். உடல் எடையை குறைத்து நீங்கள் உடல் ரீதியாக ஆரோக்கியமாக உணரும் போது, மனநல ரீதியாகவும் நீங்கள் ஆரோக்கியமாக உணர்வீர்கள் என்கிறார் நேஹா தூபியா.


(பொறுப்பு துறப்பு: இவை அவரின் தனிப்பட்ட நேர்காணலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)


மேலும் படிக்க | பெண்களின் இடுப்பு அழகுக்கு தடையாக இருக்கும் அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிள் டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ