இளம் பெண்களின் இடுப்பு அழகை எடுப்பாக காட்ட அடி வயிறு தொப்பை தடையாக இருந்தால், சிம்பிளான இந்த டிப்ஸை பின்பற்றினால், உங்கள் அழகை மீட்டெடுக்கலாம்.

இளம் பெண்கள் பலருக்கும சினிமா நடிகைகள் போல் ஸ்லிம்மாக, அழகாக இருக்க வேண்டும் என விரும்பினாலும் அவர்களுக்கு பெரும் தடையாக இருப்பது அடிவயிறு தொப்பை தான். இதற்கு வாழ்க்கை முறையே காரணம். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சினிமா பிரபலங்கள் தினசரி உணவு முதல் உடற்பயிற்சி வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். ஸ்கிரீனுக்கு பின்னால் அவர்கள் உடலுக்காக கொடுக்கும் இத்தகைய முக்கியத்துவத்தை இளம் பெண்கள் பலரும் அறிந்திருப்பதில்லை. இந்த நிலையில், இடுப்பு அழக்காகவும், அடிவயிறு தொப்பையும் குறைக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் தினசரி உணவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
1. கார்ப்ஸ் உணவுகளுக்கு விலக்கு
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த பொருட்கள் உடலில் கொழுப்பை விரைவாக அதிகரிக்கின்றன. எனவே, முதலில் இந்த விஷயங்களை உங்கள் உணவில் இருந்து விலக்க வேண்டும். பெரும்பாலான பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு உள்ளது, எனவே இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
2. சர்க்கரை
சர்க்கரை உடல் கொழுப்பை வேகமாக அதிகரிக்கிறது. சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. முக்கியமாக இதில் உள்ள கூடுதல் கலோரிகளால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இந்த கூடுதல் கலோரிகளை உடலால் எரிக்க முடியாமல் போனால், அவை கொழுப்பாக சேமித்து, எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
3. பழச்சாறு
இப்போதெல்லாம், நேரமின்மையால், மக்கள் பழத்தை கடித்து சாப்பிடாமல் அதனை ஜூஸாக செய்து குடிக்கிறார்கள். ஆனால் இந்த பழக்கம் எடை இழப்பு பயணத்தில் உங்களுக்கு சிக்கல்களை உருவாக்கும். ஏனென்றால் ஜூஸ்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அத்துடன் நார்ச்சத்து அளவும் குறைகிறது. நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் அவசியம். எனவே பழச்சாறுக்குப் பதிலாக பழங்களை நேரடியாகச் சாப்பிடுங்கள்.
4. குளிர் பானங்கள்
குளிர் பானங்களில் அதிக சர்க்கரை இருப்பதால் உடல் பருமனை ஏற்படுத்தும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் இருந்து சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா மற்றும் பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிடவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ