டயட் இல்லாமல் எடையை குறைத்த ஸ்ருதிஹாசன்! சீக்ரெட் என்ன? ரொம்ப சிம்பிள்!!
Shruti Haasan Weight Loss Secrets : பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தன் உடல் எடையை டயட் இல்லாமல் குறைத்தாராம். திரையுலகில் இருக்கும் இவர் எப்படி இதை செய்தார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Shruti Haasan Weight Loss Secrets : தமிழ் திரை உலகில் கவனம் ஏற்கும் நடிகையாக உள்ளம் இருப்பவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகளான இவர் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் திரையுலர்கள் முழு நேரம் இறங்காததற்கு முன்பு சற்று எடை கூடியிருந்தார். அதன் பிறகு உடல் எடையை மடமடவென குறைத்தார். இதற்குப் பின்னால் இருக்கும் சீக்ரெட் என்ன? இங்கு பார்ப்போம்.
எடையை குறைத்த ஸ்ருதிஹாசன்:
நடிகை ஸ்ருதிஹாசன் முழு நேரமாக சினிமாவில் இறங்குவதற்கு முன்பு, உடல் எடை சற்று கூடி இருந்தார். இதைக் குறைக்க டயட்டை பெரிதாக பின்பற்றவில்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக இருக்கிறது. கூடவே ஸ்ருதிஹாசனுக்கு பிசிஓஎஸ் பிரச்சனையும் இருக்கிறது. இதையும் அவர் நேர்த்தியாக கையாண்டு வருகிறார். இது எப்படி?
டயட்டிங்:
சுருதிஹாசன், பிற நடிகைகளை போல மிகவும் கடினமான டயட்டை எல்லாம் மேற்கொள்வது இல்லையாம். அதுபோல முன்னர் முயற்சி செய்து பயனளிக்காமல் போனதால் டயட்டிங்கை கைவிட்ட அவர், தனக்கு புரதம் அளிக்கும் உணவுகளை மட்டும் சரியாக. எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
ஸ்ருதி, தனது தினசரி உணவில் புரதத்தின் அளவும் கார்போஹைட்ரேட்டின் அளவும் சரியாக இருப்பதை பேணி காக்கிறார். கிரில் சிக்கன், பச்சை காய்கறிகள், சாலட்டுகள், முட்டை, சூப் மற்றும் இட்லி சாம்பார் இவரது உணவு பட்டியலில் பெரும் பங்கு வருகின்றன.
உடற்பயிற்சிகள்:
ஸ்ருதிஹாசன், தினமும் கார்டியோ உடற்பயிற்சி செய்வதை தவறாதவராக இருக்கிறார். தனது உடல் கொழுப்பை குறைப்பதற்காகவும், இதய ஆரோக்கியத்தை காத்துக் கொள்வதற்காகவும், தனது எலும்பை வலுவாக்கிக் கொள்வதற்காகவும் இந்த உடற்பயிற்சிகளை அவர் செய்கிறார்.
குறிப்பாக, ட்ரெட்மில் வாக்கிங் அவருக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சியும். வாக்கிங் மட்டுமின்றி இதில் ஓடவும் செய்வாராம். இதனால் தனது வயிற்றுக் தொப்பை குறைவதாகவும், இதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
நடனம்:
நடனம் ஆடுவதும் ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த உடற்பயிற்சியும். இது, கொழுப்பைக் குறைக்க எளிமையான உடற்பயிற்சி எனக்கூறும் அவர், இது தனது தசை வளர்ச்சிக்கு உதவும் என கூறுகிறார். மேலும், உடல் Flexible ஆக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த உணவு..
ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த காய்கறி, உருளைக்கிழங்கு. மேலும், தான் நான்-வெஜ் பிரியை எனும் கூறும் அவர் ஷெல் மீன்களால் அலர்ஜி ஆனதால் அதை சாப்பிடுவதை நிறுத்தி விட்டாராம். மேலும், தனது சீட் டேவில் அதிகமாக சாதம் சாப்பிடுவதாகவும் கூடவே உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். தன் டயட்டில் பழங்களை பெரிதாக சேர்க்காத ஸ்ருதி, காய்கறிகளை எடுத்துக்காெள்வதாகவும் எந்த வகையான ஐஸ்கிரீமாக இருந்தாலும் அதை விரும்பி சாப்பிடுவதாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் ஆன்லைனிலும் ஆர்டர் செய்து உணவு வாங்கி சாப்பிடுவாராம். ஆனால், அதை எப்போதாவதுதான் செய்வாராம். இவருக்கு பிசிஓஎஸ் பாதிப்பு இருக்கிறது. இதனால், தினசரி 1 மணி நேர வர்க்-அவுட் மற்றும் யோகாசனம் கண்டிப்பாக செய்வாராம். இதனால்தான், அவரது எடையும், பிசிஓஎஸ் பாதிப்பும் சமமாவதாக கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெயிட்டை குறைக்க பிரியாமணி செய்யும் விஷயம்! வாரத்தில் 3 முறை பண்ணா போதுமாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ