Solar Eclipse: சூரிய கிரகணம் முடிந்த உடனே இதை செய்தால் பாதிப்பில் இருந்து விடுபடலாம்
பொதுவாக சூரிய கிரகண காலத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது. ஆனால், கிரகணம் முடிந்தவுடன் சில வேலைகளை செய்யவேண்டும். அவை, கிரகணத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்
Surya Grahan 2022: சூரிய கிரகணம் பூமியில் வசிக்கும் உயிரினங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சூரியனின் கதிர்கள் மறையும் நேரம் அசுபமானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது அறிசியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
பொதுவாக சூரிய கிரகண காலத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது. ஆனால், கிரகணம் முடிந்தவுடன் சில வேலைகளை செய்யவேண்டும். அவை, கிரகணத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்.
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி இருந்தால், சூரிய ஒளி சந்திரனை அடைய முடியாது, அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழ உள்ளது.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்
கிரகணங்கள் அசுபமாக கருதப்படுகிறது
சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. கிரகண காலத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.
ஏப்ரல் 30 ஆம் தேதி இந்த கிரகணம் தென்/மேற்கு அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் தெரியும். சூரிய கிரகணத்தின் நேரம் ஏப்ரல் 30 சனிக்கிழமை நள்ளிரவு 12:15 முதல் அதிகாலை 04:07 வரை இந்தியாவில் இருக்கும்.
கிரகணத்திற்கு பிறகு செய்ய வேண்டிய வேலைகள்
கிரகணம் முடிந்ததும், வீட்டை சுத்தம் செய்யுங்கள். வீட்டின் மூலைகளிலும் புனிதமான கங்கைநீரிஐத் தெளிக்கலாம். அதனால் கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்களின் எதிர்மறை விளைவு நீங்கும்.
கிரகணம் முடிந்ததும் குளிக்கவும். பொதுவாக கிரகணம் முடிந்தவுடன் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். ஆனால் இது முடியாவிட்டால், புனித நதிகளின் நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும்.
கிரகணத்திற்குப் பிறகு தானம் கொடுக்க வேண்டும். கிரகணத்திற்குப் பிறகு, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்வது நல்லது. கிரகணம் முடிந்தவுடன் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பது நல்லது என்பது ஐதீகம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR