AIAASC எனப்படும் அமெரிக்க சர்வதேச பள்ளி, கல்லூரிகள் அங்கீகார சங்கம்,  WASC எனப்படும் மேற்கத்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கத்துடன் இணைந்து இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சர்வதேச பள்ளிகளுக்கு  கூட்டு அங்கீகாரத்தை வழங்குவதற்கான முன் முயற்சியாக தொடங்கும் நிகழ்ச்சி டெல்லியில் லீ மெரிடியன் ஹோட்டலில் நடை பெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான கூட்டு அங்கீகார செயல்முறை மாணவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்பதாலும்,  போட்டி நிறைந்த உலகளாவிய சூழ்நிலையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்கவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 


AIAASC மற்றும் WASC ஆகிய அமைப்புகள் புகழ்பெற்ற அங்கீகார அமைப்புகள் என்பதோடு அவை சர்வதேச பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை  மதிப்பிடுவதற்கான அலகுகளுடன்  கவனமாக கட்டமைக்கப்பட்டவை.  


மேலும் படிக்க | அடிக்கடி சுடு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!


இந்த தொடக்க விழாவில் உரையாற்றிய AIAASC இன் தலைவர் ரொனால்ட் ஜே. கோவச்  இந்த புதிய கூட்டு நடவடிக்கை  மூலம் உலகம் முழுவதும் சர்வதேச கல்விக்கான  அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.  


WASC இன் தலைவர் பேர்ரி ஆர். குரோவ்ஸ் குறிப்பிடும்போது,  WASC கடுமையான தர உத்தரவாதங்களின்  மூலம் பள்ளிகளை மேம்படுத்துவதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என்றார்.  


AIAASC இன் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகனலட்சுமி உரையாற்றுகையில்,  இரு நிறுவனங்களும் உயர்தர கற்றல், நல்வாழ்வு மற்றும் உலகளவில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று தெரிவித்தார். 


மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களை யாருக்குமே பிடிக்காது..! யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ