துணிவு படம் உருவானது இப்படித்தான் - இயக்குனர் ஹெச்.வினோத்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்த சம்பவத்தை இயக்குனர் நினைவுகூர்ந்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 4, 2022, 09:52 AM IST
  • துணிவு படம் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
  • படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
  • வாரிசு படமும் அதே தேதியில் வெளியாகிறது.
துணிவு படம் உருவானது இப்படித்தான் - இயக்குனர் ஹெச்.வினோத்! title=

இயக்குனர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய பின்னர் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து 'துணிவு' படத்தை இயக்கி வருகிறார்.  அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் அவர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையப்போகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், மமதி சாரி மற்றும் சமுத்திரக்கனி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  இந்த படம் வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது என்று ஏற்கனவே பல தகவல்கள் வெளியானது, மேலும் பஞ்சாபில் நடந்த ஒரு உண்மையான வங்கி கொள்ளை சம்பவம் தான் படத்தின் கதை என்றும் செய்திகள் வெளிவந்தது.

மேலும் படிக்க | தளபதி 67 பூஜையிலிருந்து ஷூட்டிங்வரை - புதிய அப்டேட்ஸ்

H Vinoth

'துணிவு' படம் பற்றிய பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் ஹெச்.வினோத் துணிவு படம் குறித்தும், இதற்கு முன்னர் வினோத்-அஜித் கூட்டணியில் வெளியான வலிமை படம் குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.  'துணிவு' படம் குறித்து அவர் கூறுகையில், இந்த படத்தை முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கவே நான் விரும்பினேன், அதற்கேற்ப கதையையும் வடிவமைத்தேன்.  ஆனால் அஜித் சார் இந்த கதையை கேட்டு வியந்து நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறினார், உடனே நான் படத்தின் தரத்தை உயர்த்திவிட்டேன் என்று கூறியுள்ளார்.  அடுத்ததாக 'வலிமை' படம் குறித்து பேசுகையில், 'வலிமை' படத்தில் நிறைய கடின உழைப்பு உள்ளது, படம் வெளியான இரண்டு நாட்கள் வரையில் நான் கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தேன்.

ஆனால் மூன்றாவது நாள் குடும்பமாக வந்த ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்த்தனர், இந்த படம் வணிக ரீதியாகவும், கதை ரீதியாகவும் வெற்றிபெற்றது அப்போது உறுதியானது என்று தெரிவித்தார்.  மேலும் வலிமை படம் குறித்து பேசியவர் பல பெண்களும், குடும்பத்தினரும் என்னை அழைத்து பாராட்டினார்கள், பல அரசு கொள்கைகளுக்கும் இந்த படம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியாக தெரிவித்தனர் மற்றும் இப்படத்தை பார்த்துவிட்டு போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் முதல்வர் பேசினார் என்று இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News