விவசாயிகளின் போராட்டத்தால் Air India விமானத்தை தவறவிட்டவர்களுக்கு ஆறுதல்
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு காரணமாக விமானங்களை தவறவிட்டவர்களுக்கு ஏர் இந்தியா நிவாரணத்தை அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு காரணமாக விமானங்களை தவறவிட்டவர்களுக்கு ஏர் இந்தியா நிவாரணத்தை அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திலிருந்து (IGI Airport) 2020 நவம்பர் 26 ஆம் தேதியன்று புறப்படவிருந்த விமானங்களுக்கு இந்த தள்ளுபடி செல்லுபடியாகும் என்று ஏர் இண்டியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: வியாழக்கிழமையன்று விவசாயிகளின் எதிர்ப்பு அணிவகுப்பு காரணமாக தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர் இந்தியா, இந்த போக்குவரத்து சிக்கலால் விமானத்தை தவறவிட்டவர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திலிருந்து (IGI Airport) 2020 நவம்பர் 26 ஆம் தேதியன்று புறப்படவிருந்த விமானங்களில் பயணிக்க இருந்தவர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும் என்று ஏர் இண்டியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, விமானத்தை தவறவிட்டவர்கள், ஏர் இந்தியாவின் விமானத்தில் ஒருமுறை இலவசமாக பயணிக்கலாம். இது பல பயணிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் நடத்திய ‘டெல்லி சாலோ’ (Delhi Chalo) அணிவகுப்பைக் கருத்தில் கொண்டு டெல்லி காவல்துறை வாகன சோதனையை தீவிரப்படுத்தியது, இதன் விளைவாக ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து தேசிய தலைநகருக்கு வரும் மக்கள் மாநிலங்களின் எல்லைக் கடப்புகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பஞ்சாபில் இருந்து விவசாயிகள் தங்கள் அணிவகுப்பின் ஒரு பகுதியாக நகரத்தை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லியை அடைய உள்ளனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR