அடுத்த சில நாட்களில் நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருகிறது. ஏர் இந்தியாவின் மகாராஜா இ-சூப்பர் சேவர் திட்டத்தின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், குறைவான கட்டணத்தில் அதிக அளவிலான பயணத்தை மேற்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் இந்தியா (Air India) மூலம் அளிக்கப்படும் இந்த சலுகை 15 டிசம்பர் 2020 வரை செல்லுபடியாகும். இந்த சலுகையின் கீழ், டிக்கெட் முன்பதிவு செய்தால், ​​5 கிலோ வரை கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்லும் வசதியும் உங்களுக்கு கிடைக்கும். மேலும், பயணத்தின் தேதி மற்றும் பயணிக்கும் இடத்தை மாற்றுவதற்கான வசதியையும் நீங்கள் பெறுவீர்கள்.


மகாராஜா இ-சூப்பர் சேவர் திட்டம் என்றால் என்ன


இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு multi coupon e-ticket-கள் வழங்கப்படுகின்றன. இதில் எகானமி மற்றும் பிசினஸ் கிளாஸ் (Business Class) என இரண்டு வகை டிக்கெட்டுகளும் இருக்கும். நீங்கள் எகானமி வகுப்பிற்கு ஒரே நேரத்தில் 2, 4 அல்லது 8 கூப்பன்களை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், பிசினஸ் கிளாசிற்கு 4 அல்லது 8 கூப்பன்களை முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலத்திற்குள்தான் நீங்கள் பயணிக்க வேண்டும். ஏர் இந்தியாவின் எந்தவொரு உள்நாட்டு விமானத்திலும் நீங்கள் பயணிக்க முடியும்.


எகானமி வகுப்பு மகாராஜா இ-சூப்பர் சேவர்சின் கட்டணங்கள்


எகானமி வகுப்பு, இ-சூப்பர் சேவரின் 2 கூப்பன்கள், 45 நாட்கள் - 3 மாதங்கள் - 9,200 ரூபாய்


இ-சூப்பர் சேவரின் 4 கூப்பன்கள், 3 மாதங்கள் - 6 மாதங்கள் - 18,200 ரூபாய்.


இ-சூப்பர் சேவரின் 8 கூப்பன்கள், 6 மாதங்கள் - 12 மாதங்கள் - 36,000 ரூபாய்.


பிசினஸ் வகுப்பு இ-சூப்பர் சேவர்சின் கட்டணங்கள்


பிசினஸ் வகுப்பு, இ-சூப்பர் சேவரின் 4 கூப்பன்கள், 3 மாதங்கள் – 44,000 ரூபாய்.


இ-சூப்பர் சேவரின் 8 கூப்பன்கள், 6 மாதங்கள் - 80,000 ரூபாய்*.


அரசு / விமான நிலைய வரி கூடுதலாக வசூலிக்கப்படும்.


ALSO READ: Lockdown இல் ரத்தான டிக்கெட்டுக்கு முழு Refund வழக்கும் இந்த Airlines


இந்த நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்


உங்களிடம் ஒரு நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். அதன் அடிப்படையில் நீங்கள் வேலிடிடி காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். உங்கள் பயணத் திட்டம் மாறினால் எந்த பிரச்சனையும் இல்லை. விமானம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வரை நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யும் வசதி உங்களுக்கு கிடைக்கிறது. டிக்கெட் முன்பதிவு (Ticket Booking) செய்யும் போது உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்லும் வசதி


பயணத்தின் போது 5 கிலோ வரை கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்லும் வசதி உங்களுக்கு கிடைக்கும். இதற்கு உங்களிடம் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.


ALSO READ: அதிக பயணிகள் விமானத்தில் பயணிக்க முடியாது! அரசின் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR