Air India Wi-FiService in Flights: விமான பயணத்தின் போது இண்டெநெட் வசதியை அனுபவிக்க வேண்டும் என்ற பயணிகளின் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஏர் இந்தியா தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வைஃபை இணைய சேவையை ஜனவரி 1, 2025 முதல் தொடங்கியுள்ளது. இந்த வசதி Airbus A350, Boeing 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட Airbus A321neo வகை விமானங்களில் கிடைக்கும். இதன் மூலம், நாட்டிற்குள் விமானங்களில் வைஃபையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா ஆனது. தற்போது இந்த சேவை இலவசம் என்பது சிறப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் இந்தியாவின் உள்நாட்டுப் பயணிகள் இனி விமான பயணத்திலும், பல ஆயிரங்கள் அடி உயரத்திலும், இணையத்தில் உலாவவும், சமூக ஊடகங்களை அணுகவும், அலுவலக வேலையில் அப்டேட் நிலையில் இருக்கவும் அல்லது விமானங்களில் இருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.


ஏர் இந்தியாவின் தலைமை வாடிக்கையாளர் நலஅதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், "இன்றைய பயணத்தின் முக்கிய அங்கமாக இண்டர்நெட் அழைப்பு உள்ளது. பயணிகளுக்கு நிகழ்நேர தகவல்களை பகிர்வதற்கான வசதி கிடைக்கும். அதோடு, பயணிகள் பயணத்தின் போது செயல்திறனை அதிகரிக்க வசதி கிடைக்கும். எங்கள் விமான பயணிகள் இந்த புதிய அம்சத்தை வரவேற்பார்கள் என்றும் விமான பயணங்களின் போது இண்டநெட் இணைப்பை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றால்.


மேலும் படிக்க| புது போன் வாங்க பிளானா....2025 ஜனவரியில் அறிமுகமாகும் சில சூப்பர் போன்கள் விபரம் இதோ


Wi-Fi சேவையின் அம்சங்கள்


மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் (iOS மற்றும் Android இயக்க முறைமைகள்) போன்ற Wi-Fi இயக்கப்பட்ட சாதனங்கள் மூலம் பயணிகளுக்கு இந்த சேவை கிடைக்கும். 10,000 அடி உயரத்திற்கு மேல், பயணிகள் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க முடியும். அனைத்து பயணிகளும் அனுபவிக்கும் இந்த வசதி முதற்கட்டமாக இலவசமாக வழங்கப்படும்.


சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் புதிய தொடக்கம்


சர்வதேச வழித்தடங்களில் முன்னோடித் திட்டமாக ஏர் இந்தியா இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது. நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய இடங்கள் இதில் அடங்கும். தற்போது உள்நாட்டு வழித்தடங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. Wi-Fi சேவை படிப்படியாக மற்ற விமானங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.


எதிர்காலத்தில் Wifi சேவை வழங்குவதற்கு விமானத்தில் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் ஏர் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் தற்போது இது இலவசமாக கிடைக்கும். இந்த புதிய முயற்சியின் மூலம், ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு நவீன மற்றும் மேம்பட்ட விமான பயண அனுபவத்தை வழங்குவதில் ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.


ஏர் இந்தியா வழங்கும் இந்த புதிய சேவை மூலம் பயணிகள் இணையத்தில் உலவ, சமூக ஊடகங்களைப் பயன்படுத்த, வேலை செய்ய அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் வணிகப் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் விமானத்தின் போது கூட தங்கள் வேலையைத் தொடரலாம்.


மேலும் படிக்க | Flipkart Big Bachat Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் சர்ப்ரைஸ் ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ