Air Asia  விமான சேவையானது தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் விமானசீட்டுகளின் விலையில் 90% வரை தள்ளுபடி அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'Big sale' திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விமானசீட்டு சலுகைகளைப் பற்றி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.airasia.com) குறிப்பிட்டுள்ளது ஏர் ஏசியா.


Air Asia-வின் இந்த புதிய விளம்பர விற்பனை 'பெரிய உறுப்பினர்களுக்கு' மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சலுகை விற்பனையானது வரும் மார்ச் 11, 2018 வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


இந்த சலுகையின்படி, செப்டம்பர் 3, 2018 முதல் மே 28, 2019 வரை பயணிக்க விரும்பும் பயணிகள் இந்த சலுகையின் அடிப்படையில் பயணசீட்டினை பதிவுசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த 90% வரையிலான சலுகையினை பயனர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில், Air Asia-வின் Big Sale போட்டியில் அவர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் 'Final Call Sale' வரை காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.