சென்னை - பெங்களூரு தடத்தில் மீண்டும் AirAsia சேவை துவக்கம்!
பெங்களூர் - சென்னை வழித்தடத்திற்கு இடையே மீண்டும் விமான சேவையினை துவங்க ஏர்ஏசியா திட்டமிட்டுள்ளது!
பெங்களூர் - சென்னை வழித்தடத்திற்கு இடையே மீண்டும் விமான சேவையினை துவங்க ஏர்ஏசியா திட்டமிட்டுள்ளது!
பெங்களூர் மற்றும் சென்னை வழித்தடத்திற்கு இடையேயான விமான சேவையினை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏர்ஏசியா நிறுவனம் நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த வழித்தடத்தில் விமான சேவையினை துவங்கியுள்ளது.
இதன்படி., இன்று காலை 7.25 மணியளவில் இந்த வழித்தடத்ததில் முதல் விமானத்தை இயக்கியது.
இதுகுறித்து ஏர்ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அமர் அரோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் தினம் 5 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த 5 விமான சேவையானது, காலை 3 எனவும் மதியம் 1 மற்றும் மாலை 1 என வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதேவேலையில் சென்னையில் இருந்து புபனேஸ்வருக்கு 1 நேரடி விமானத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
தற்போது பெங்களூருவில் இருந்து புதுடெல்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, குவஹாத்தி, இம்பால், விஷாகபட்டினம், ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோகிரா, ராஞ்சி மற்றும் புபனேஸ்வர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையினை ஏர்ஏசியா நிறுவனம் வழங்கிவருகிறது!