சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டும் வகையில் வரும் மார்ச் 8 ஆம் நாள் AirIndia நிறுவனம், பெண்கள் குழுவினை மட்டுமே கொண்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்படி நியூயார்க், பிராங்பேர்ட், சிங்கப்பூர் மற்றும் இதர பல இடங்களுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்களினை பெண்கள் குழுவினை கொண்டு இயக்க திட்டமிட்டுள்ளது. 


இதுகுறித்து, தேசிய விமான சேவை அதிகாரிகள் தெரிவிக்கையில் "உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் சிலவற்றில் பெண் விமானி மற்றும பெண் ஊழியர்களை கொண்டு இயக்க திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


மேலும் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், நெவார்க், சிகாகோ மற்றும் வாஷிங்டன் டிசி - மிலன், பிராங்பேர்ட் மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு இடையிலான அனைத்து அமெரிக்க நகரங்களுக்கும் இயக்படும் AirIndia விமானங்கள் அனைத்திலும் பெண் பணியாளர்கள் கொண்டு இயக்கப்படும் என தெரியவந்துள்ளது.


இத்திட்டத்தின் படி ஏர் இந்தியா குழுவினர் சுமார் 150-க்கும் அதிகமான விமானங்களைக் பயண்படுத்த திட்டமிட்டுள்ளனர்.