புதுடெல்லி: கொரோனா தொற்று தொடர்ந்து நாட்டில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏர்டெல் தனது நெட்வொர்க்கில் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க, இந்த நிறுவனம் ரூ .270 கோடியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலிவான பேக்கை அளிக்கும் ஏர்டெல் 
தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 பேக் இலவசமாக வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த பேக் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த தொகுப்பில், ரூ .38 மதிப்பிலான டாக்டைம் மற்றும் 100 எம்பி தரவு கிடைக்கிறது. இந்த பேக் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 


ஏர்டெல்லின் இரட்டை நன்மைகள்
இந்த கொரோனா தொற்று காலத்தில், வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம் என்று நிறுவனம் கூறியது. இதை மனதில் கொண்டு, ஏர்டெல்லின் ரூ .79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan) மூலம் இரட்டை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த நெருக்கடியான நேரத்தில் வாடிக்கையாளர்களால் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க முடியும்.


ALSO READ:இலவச ரீசார்ஜ் வழங்கும் Airtel, புதிய பேக் அறிமுகம்!


ஏர்டெல் இந்த வசதியை வழங்கியது
இது தவிர, கொரோனா (Coronavirus) காலத்தில் ஏர்டெல் பல ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. Airtel Thanks செயலியில், எக்ஸ்ப்ளோர் பிரிவில் இரண்டு துணைப்பிரிவுகள் நிறுவனத்தால் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் துணைப்பிரிவு  Covid SoS ஆகும். இதில் கொரோனா தொடர்பான உதவியை பெற முடியும். இரண்டாவது துணைப்பிரிவுக்கு Cowin என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி பதிவு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நன்மைகள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில நாட்களில் கிடைக்கும்.


ALSO READ: அசத்தும் Airtel: ரூ. 279 ரீசார்ஜ் செய்தால் 4 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு முற்றிலும் இலவசம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR