Big News: CoWIN செயலியில் இனி Sputnik V தடுப்பூசிக்கும் பதிவு செய்யலாம், விலை, பிற விவரம் இதோ

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி-யின் முதல் தொகுப்பு (சுமார் 1.5 மில்லியன் டோஸ்) மே 1 அன்று இந்தியாவை அடைந்தது. கடந்த வாரம் தடுப்பூசி விலையை வெளியிட்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், மே 13 அன்று கசவுலி மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2021, 03:29 PM IST
  • ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி-ஐ இப்போது கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
  • இது இப்போது ஐதராபாதில் மட்டும் செலுத்தப்படுகிறது.
  • அடுத்த கட்டமாக ஸ்புட்னிக்-வி விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய இடங்களில் செலுத்தப்படும்.
Big News: CoWIN செயலியில் இனி Sputnik V தடுப்பூசிக்கும் பதிவு செய்யலாம், விலை, பிற விவரம் இதோ title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இப்போது தொற்றுநோய்க்கு எதிரான போரில் மற்றொரு தடுப்பூசி சேர்ந்துள்ளது. ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி-ஐ  இப்போது கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்பட்டு வந்தன. 

ரெட்டிஸ் ஆய்வகம் அப்பல்லோ மருத்துவமனையுடன் ஒப்பந்தத்தை மெற்கொண்டது. 
ஸ்பட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிக்காக டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் பின்னர், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-யின் செலுத்தல் விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய இடங்களில் நடக்கும்.  

ஒரு டோஸுக்கு 1250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்

ஊடக அறிக்கையின்படி, ரஷ்ய தடுப்பூசி (Vaccine) ஸ்பூட்னிக்-வி ஒரு டோஸ் அப்பல்லோ மருத்துவமனையில் ரூ .1250 க்கு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவமனையின் செலவும் அடங்கும். சமீபத்தில், டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இது குறித்த தகவல் அளித்தபோது, ஸ்பூட்னிக் வி-யின் விலை ரூ .948 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதகாவும், அதில் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் கூறியது. இதன் பின்னர், தடுப்பூசியின் விலை ரூ .995.4 ஆக இருக்கும் என்றது டாக்டர். ரெட்டீஸ் நிறுவனம். இதற்குப் பிறகு, இதில் மருத்துவமனை செலவுகளைச் சேர்த்த பிறகு, தடுப்பூசியின் விலை ரூ .1250 ஆக இருக்கும்.

ALSO READ: இந்தியாவில் முதல் ஸ்புட்னிக் வி ரஷ்ய தடுப்பூசி செலுத்தப்பட்டது: செலுத்திக்கொண்டது யார்?

ஸ்பூட்னிக் தடுப்பூசியின் முதல் தொகுப்பு கப்பல் மூலம் மே 1 அன்று இந்தியாவை அடைந்தது
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி-யின் முதல் தொகுப்பு (சுமார் 1.5 மில்லியன் டோஸ்) மே 1 அன்று இந்தியாவை அடைந்தது. கடந்த வாரம் தடுப்பூசி விலையை வெளியிட்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், மே 13 அன்று கசவுலி மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 4329 பேர் இறந்தனர்

மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சம் 63 ஆயிரம் 533 பேர் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். 4329 பேர் இறந்துள்ளனர். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இது மிக அதிக இறப்பு எண்ணிக்கையாகும். நேற்றைய தொற்று அளவுடன் சேர்த்து இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடி 52 லட்சம் 28 ஆயிரம் 996 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சம் 78 ஆயிரம் 719 பேர் உயிர் இழந்துள்ளனர்.

தரவுகளின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் 22 ஆயிரம் 436 பேர் குணமாகியுள்ளனர். இதனுடன் கோவிட் -19 ல் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி 15 லட்சம் 96 ஆயிரம் 512 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 33 லட்சம் 53 ஆயிரம் 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ: இந்தியாவில் Sputnik Lite தடுப்பூசி எப்போது; ரஷ்யா கூறியது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News