Airtel, Jio மற்றும் VI: ரூ. 300க்குள் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை தருவது யார்?
அதிகபட்ச டேட்டா பயன்பாட்டை பெறும் வகையில் உங்களுக்கு ஏர்டெல், ஜியோ மற்றும் வோடோபோன் போன்ற நெட்வொர்க்குகள் ரூ.300க்குள் சில சிறப்பான திட்டங்களை வழங்குகிறது.
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் ஒரு நிமிடம் கூட டேட்டா இல்லாமல் இருக்கமுடியாது, இதன் மூலம் தான் பலருக்கும் வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூட சொல்லலாம். மொபைல் டேட்டாவை பயன்படுத்தி வாட்ஸ்அப் பயன்படுத்துதல், வீடியோ அழைப்புகள் செய்தல், டிஜிட்டல் பணம் செலுத்துதல் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துதல் போன்ற இன்னும் ஏராளமான செயல்களை செய்யலாம். தற்போது அதிகபட்ச டேட்டா பயன்பாட்டை பெறும் வகையில் உங்களுக்கு ஏர்டெல், ஜியோ மற்றும் வோடோபோன் போன்ற நெட்வொர்க்குகள் ரூ.300க்குள் சில சிறப்பான திட்டங்களை வழங்குகிறது.
1) ஜியோ:
ஜியோ ரூ.209 (28 நாட்கள்), ரூ.179 (24 நாட்கள்) மற்றும் ரூ.149 (20 நாட்கள்) ஆகிய விலைகளில் ஒரு நாளைக்கு 1ஜிபி திட்டங்களை வழங்குகிறது. இதில் உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் போன்ற சலுகைகளை வழங்குகிறது. அடுத்ததாக இதில் 1.5ஜிபி டேட்டா திட்டங்களும் உள்ளது. இதன் விலைகள் முறையே ரூ.119 (14 நாட்களுக்கு), ரூ.199 (23 நாட்களுக்கு), ரூ.239 (28 நாட்களுக்கு) மற்றும் ரூ.259(30 நாட்களுக்கு) ஆகும். மேலும் ஜியோ ஒரு நாளைக்கு 2ஜிபி திட்டங்களையும் வழங்குகிறது. அதன்படி 28 நாட்களுக்கு ரூ.299, 23 நாட்களுக்கு ரூ.249 திட்டம் மற்றும் 30 நாட்களுக்கு ரூ.296 திட்டத்தையும் வழங்குகிறது.
2) ஏர்டெல்:
ஏர்டெல் ரூ.300க்குக் குறைவான பல திட்டங்களை வழங்குகிறது, ரூ.209 விலையில் 21 நாட்களுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர இதே டேட்டா அளவில் ரூ.239 திட்டமும், 28 நாட்களுக்கு ரூ.265 விலையில் திட்டத்தையும் வழங்குகிறது. ரூ. 296 திட்டமானது 30 நாட்களுக்கு மொத்தமாக 25 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. மேலும் ரூ.319க்கு கிடைக்கும் திட்டமானது 1 மாத வேலிடிட்டியுடன் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
3) வோடோபோன்:
வோடபோன் ஐடியா ரூ.299 விலையில் 28 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.319 விலையில் 28 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ரூ.239 விலையில் 28 நாட்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டாவையும், ரூ.199 விலையில் 18 நாட்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டாவை மற்றும் ரூ.219 விலையில் 21 நாட்களுக்குமான சலுகையையும் வழங்குகிறது. மேலும் இது ரூ.327 விலையில் மொத்தமாக 25ஜிபி டேட்டா திட்டத்தையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | 2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ