Cheapest Smartphone: வெறும் ரூ.6,499-க்கு கிடைக்கும் அட்டகாசமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

Budget Smartphone: இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் பயனர்களால் மிகவும் விரும்பப்படும் போனாகும். ஏனெனில் அதன் விலை மிகக் குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 02:17 PM IST
  • ரூ.7,000க்குள் வரும் இந்த ஸ்மார்ட்போன், உங்கள் பட்ஜெட்டை பாதிக்காமல், அதே சமயம் உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும்.
  • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
  • Infinix Smart 6 போனின் விலை ரூ. 6,499 ஆகும்.
Cheapest Smartphone: வெறும் ரூ.6,499-க்கு கிடைக்கும் அட்டகாசமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் title=

பட்ஜெட் ஸ்மார்ட்போன்:  குறைந்த பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா? குறைந்த விலையில் நல்ல அம்சங்கள் கிடைக்க வேண்டுமா? இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் பயனர்களால் மிகவும் விரும்பப்படும் போனாகும். ஏனெனில் அதன் விலை மிகக் குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது. 

ரூ.7,000க்குள் வரும் இந்த ஸ்மார்ட்போன், உங்கள் பட்ஜெட்டை பாதிக்காமல், அதே சமயம் உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது. நீங்களும் இந்த புத்தாண்டில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், அதன் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Infinix Smart 6: இதன் விலை என்ன? 

Infinix Smart 6 போனின் விலை ரூ. 6,499 ஆகும். ஆனால் இது போனின் அசல் விலை அல்ல, ஏனெனில் அதன் அசல் விலை 8,999 ஆகும். இதில் 27% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு கூகுள் வைத்திருக்கும் சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா? 

Infinix Smart 6: விவரக்குறிப்புகள்

Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் HD+ ரெசல்யூஷன் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் உடன் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 500 nits ப்ரைட்னஸ் மற்றும் 89 சதவிகித ஸ்க்ரீன்-டு-பாடி விகிதத்தை வழங்குகிறது. இந்த போனில் கைரேகை ஸ்கேனர் (ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்) இல்லை என்பது இதில் உள்ள ஒரு குறைபாடாகும். இதில் சதுர பின்புற கேமரா மாட்யூல் உள்ளது. ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி முன்பக்க செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது.

Infinix Smart 6: அம்சங்கள்

உட்புரத்தில், Infinix Smart 6 HD போன் MediaTek Helio A22 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 2ஜிபி ரேம் மற்றும் 2ஜிபி விரிவாக்கக்கூடிய ரேம் வசதி உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள் சேமிப்பு (இண்டர்னல் ஸ்டோரேஜ்) உள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பில் இயங்குகிறது.

Infinix Smart 6: பேட்டரி

Infinix Smart 6 HD போன் 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி யூனிட்டிலிருந்து அதன் ஆற்றலைப் பெறுகிறது. Infinix Smart 6 HD இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம், இரட்டை 4G VoLTE, WiFi, Bluetooth மற்றும் மைக்ரோ USB போர்ட் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | ரூ 769 ரீசார்ஜ் பிளான்..சலுகைகளை அள்ளி வீசும் பிஎஸ்என்எல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News