ஏர்டெல், கார்பன் மொபைல்களுடன் இணைந்து புதிய இரண்டு ஸ்மார்ட்போன் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல் இன்று இரண்டு ஸ்மார்ட்போன் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ. 1500-க்கு ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஜியோ ஸ்மார்ட்போன் போட்டியை சமாளிக்க, தற்போது ஏர்டெல் சந்தை விலையை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது.
 
ஏர்டெல் நிறுவனம் இரண்டு 4G ஸ்மார்ட்போன்கள் கார்பன் மொபைல்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. 'A1 இந்தியன்' மற்றும் 'ஏ41 பவர்' ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது. 'A1 இந்தியன்' போனின் விலை ரூ. 1,799 ஆகும். சந்தையில் இதன் விலை ரூ 4390. அதேபோல 'ஏ41 பவர்' போனின் விலை ரூ. 1849 ஆகும். சந்தையில் இதன் விலை ரூ.4290. 


வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும்.