புது தில்லி: 74 வது சுதந்திர தினத்தையொட்டி பெரும்பாலான நிறுவனங்கள் பயனர்களுக்கு வெவ்வேறு சலுகைகளையும் தள்ளுபடியையும் வழங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தொலைதொடர்பு நிறுவனமான Airtel இந்த சுதந்திர தினத்தை மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் கொண்டாடுகிறது. நிறுவனம் தனது பயனர்களுக்கு 1000 GB கூடுதல் தரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் Airtel Xstream Fiber broadband பயனர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நிறுவனத்தின் இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சலுகையைப் பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Airtel Xstream Fiber broadband பயனர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு:


நீங்கள் Airtel Xstream Fiber broadband திட்டத்தை வாங்கினால், திட்டத்துடன் கூடுதலாக 1000 GB தரவு வசதியைப் பெறுவீர்கள். இந்த சலுகை பழைய வாடிக்கையாளர்களுக்கு இல்லை. இந்த சலுகை நாடு முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும். அதாவது நாட்டில் Airtel-ன் அனைத்து வட்டங்களிலும், Airtel Xstream Fiber broadband திட்டத்தில் நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இலவச தரவின் செல்லுபடியாகும் தன்மை (Validity) 6 மாதங்கள் ஆகும்.


ALSO READ: WOW... இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் IPL லைவ் ஸ்ட்ரீமிங்கை இலவசமா பார்க்கலாம்!


Airtel Xstream Fiber broadband திட்டம்:


Airtel Xstream Fiber-ல், பயனர்களுக்கு 1 GBPS உடன் அதிவேக பிராட்பேண்ட் வசதியும் கிடைக்கும். இதில், நீங்கள் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க முடியும். 1000 GB இலவச கூடுதல் தரவுகளின் நன்மை Airtel Xstream Fiber-ன் ரூ.799 திட்டம் முதல் கிடைக்கும். இதில், பயனர்கள் கூடுதல் டேட்டாவுடன் Amazon Prime Membership மற்றும் Wynk Music –கையும் பெறுவார்கள். இது தவிர, Airtel Thanks நன்மைகளின் லாபங்களையும் பெறலாம்.


Airtel Xstream Fiber இணைப்பைப் பயன்படுத்தும் Airtel Digital TV வாடிக்கையாளர்கள், ரூ .1,500 திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையில், Xstream Box-க்கு upgrade செய்துகொள்ளலாம் என சமீபத்தில் Airtel அறிவித்தது. இந்த சலுகை SD மற்றும் HD Airtel Digital TV Set Top Box பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பயனர்கள் ரூ .452 மதிப்பிலான கண்டெண்ட் பேக்கை வாங்க வேண்டும்.


ALSO READ: ராணுவ வீரர்களுக்கு HDFC வங்கி அளித்த Independence Day Gift என்ன தெரியுமா?