பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் அமேசான் பிரைம் வீடியோக்களுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.  அமேசான் பிரைம் சந்தா ஆண்டுக்கு ரூ.999 முதல் ரூ.1499 வரை உள்ளது. ஆனால் ஏர்டெல்லின் இந்த திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் டேட்டா திட்டத்துடன் இலவசமாகப் பெறலாம்.  இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்வதன் மூலம் குறைந்த விலையில் பல நன்மைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் ரூ.699 திட்டம்: 


56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பலன்கள், 3ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.  அப்பல்லோ  24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், இலவச விங்க் சந்தா, எக்ஸ்ட்ரீம் ஆப், ஹெலோடியூன்ஸ் மற்றும் பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது.  தினசரி டேட்டா முடிந்த பிறகு இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இதுக்கு மேல பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான் எதிர்பார்க்காதீங்க! ஜியோ மாஸ் பிளான்



ஏர்டெல் ரூ.999 திட்டம்: 


84 நாட்கள் திட்ட வேலிடிட்டியுடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் அமேசான் ப்ரைம் சந்தா, அன்லிமிடெட் அழைப்பு, 2.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது விங்க் மியூசிக் சந்தா, எக்ஸ்ட்ரீம், ஹெலோடியூன்ஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ  24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.


ஏர்டெல் ரூ.3359 திட்டம்: 


இந்த வருடாந்திர திட்டமானது ஒரு வருட சந்தாவையும், ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும், 2.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  இதுதவிர விங்க் மியூசிக் சந்தா, அப்பல்லோ  24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ஹெலோடியூன்ஸ் மற்றும் பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் போன்ற நன்மைகளை வழங்குகிறது.


மேலும் படிக்க | அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இலவசமா வேணுமா... இதை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ