ஏர்டெல் நிறுவனம் 48 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக பல தொலைதொடர்வு நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை அள்ளித்தெளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஏர்டெல் நிறுவனம் புதிதாக 48 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கான புதிய ப்ரீபெய்டு டேட்டா ப்ளானை அறிமுகம் செய்துள்ளது. 


நாடு முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். புதிய 48 ரூபாய்க்கான டேட்டா ப்ளான் 3ஜி/4ஜி 3ஜிபி டேட்டா, என 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது.


இதேபோல 98 ரூபாய்க்கான 3ஜி/4ஜி டேட்டா ப்ளானில் 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 98 ரூபாய் ப்ளானில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10 எஸ்.எம்.எஸ்-கள் இலவசமாக அனுப்பும் வசதி உள்ளது.