கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு! இந்த அளவை மீறினால் வருமானவரித்துறை நோட்டீஸ் வரலாம்!
Credit Card: கிரெடிட் கார்டில் பல ஆபர்கள் கிடைப்பதால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பரிவர்தனைகளில் கூடுதல் கவனம் தேவை.
Income Tax Notice: தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிரெடிட் கார்டு வழங்கி வருகின்றனர். கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனைகள் செய்யும் போது வங்கிகள் பல சலுகைகளையும் வழங்குகிறது. கிரெடிட் கார்டில் சரியான தேதியில் பில்களை கட்டி வந்தால் சிபில் மதிப்பெண்களும் உயர்கிறது. அதே சமயம் கிரெடிட் கார்டில் அதிகமாக பரிவர்த்தனை செய்தால் உங்களது கணக்கு ஆய்விற்கு உட்படுத்தப்படும். கிரெடிட் கார்டில் வரம்பை மீறி பரிவர்த்தனைகள் செய்தால் வருமான வரி நோட்டிஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டில் எந்த எந்த பரிவர்த்தனைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படும்? ஒரு மாதத்திற்கு எவ்வளவு வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ்: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை.. விவரம் இதோ
கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை
கிரெடிட் கார்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி பரிவர்த்தனை செய்யும் போது அவை வருமானவரித்துறையின் கீழ் கண்காணிக்கப்படும். தற்போது அதிகளவில் பணமோசடி நடைபெற்று வருவதாலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய வாய்ப்புள்ளதாலும் வருமான வரித்துறை இந்த மாதிரியான பரிவர்த்தனைகளை அதிகம் கண்காணித்து வருகிறது. எனவே சில விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் குறிப்பிட்ட வரம்பு இருக்கும். அதற்குள் செலவு செய்யும் போது யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அதனை தாண்டும் போது நீங்களும் ரேடாரில் சிக்க வாய்ப்புள்ளது. உங்களது வங்கி கணக்குகளில் திடீரென்று அதிக பரிவர்த்தனை நடக்கும் போது குறிப்பிட்ட வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும்.
10 லட்சத்திற்கு மேல் பணமாக நீங்கள் வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் வங்கிகள் வருமானவரித்துறையிடம் தெரிவிக்கும். அதேபோல தனிநபர்கள் கிரெடிட் கார்டில் அதிகமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகள் புகார் அளிக்கும். எனவே எப்போதும் கிரெடிட் கார்டை கவனமாக கையாள வேண்டும். பொதுவாக கிரெடிட் கார்டில் மொபைல்கள், லேப்டாப், ஆடைகள் போன்றவற்றை அதிகம் வாங்குகின்றனர். இதனை தாண்டி பெரிய தொகைகளுக்கு கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாத இறுதி நாட்களில் பலருக்கு கிரெடிட் கார்டுகள் வரப்பிரசாதமாக இருக்கின்றன. இஎம்ஐ கட்ட மற்றும் அவசர தேவைகளுக்கு அதிகம் உதவுகின்றன. மேலும் ஷாப்பிங் செய்ய, படத்திற்கு டிக்கெட் புக் செய்து கொள்ளவும் உதவுகின்றன.
கையில் பணம் இல்லாமல் ஒருபொருளை வாங்க முடியும் என்பதால் பலருக்கும் கிரெடிட் கார்ட் பெரிதும் உதவிகரமாக உள்ளது. தற்போது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்ப மிகவும் எளிதான ஒன்றாக மாறி உள்ளது. உங்களிடம் குறைந்தபட்ச ஆவணங்கள் இருந்தாலே கிரெடிட் ஸ்கோர் கம்மியாக இருந்தாலும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் உங்களின் அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறை கண்காணிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரம்பை மீறி கிரெடிட் கார்ட் பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் அனைத்தும் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து செலவுகளும் மின்னணு முறையில் கண்காணிக்கப்படும். நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது இந்த பரிவர்த்தனைகளும் கணக்கில் கொள்ளப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ