தற்போது வாஷிங் மெஷின் வீட்டில் மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. துணிகளை துவைப்பதற்கும், ட்ரை செய்வதற்கும் உதவுகிறது, இது நமது வேலைகளை எளிதாக்குகிறது. எந்த ஒரு மிஷினையும் சரியாக பராமரித்தால் மட்டுமே நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும்.  பொதுவாக பலரும் வாரம் ஒருமுறை வாஷிங் மினிஷில் துணிகளை துவைக்கின்றனர். இதனால் நிறைய துணிகள் சேருகிறது. அதனை மொத்தமாக மிஷினில் போட்டு அடைத்து துவைக்கின்றனர். இந்த சமயத்தில் வாஷிங் மினிஷில் உள்ள வரம்பை மீறி துணிகளை போடும் போது மிஷினுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதிகசுமை காரணமாக மிஷின் பழுதாக வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே: உங்கள் Waiting List டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இந்த Code முக்கியம்


வாஷிங் மினிஷில் இதுபோன்ற தவறுகளை திருத்திக் கொள்வது வேண்டியது அவசியம். பொதுவாக 5 கிலோ முதல் 12 கிலோ வரையிலான பல்வேறு வகையான வாஷிங் மெஷின்கள் விற்பனைக்கு உள்ளன. வாஷிங் மிஷினில் எவ்வளவு துணிகளை போடலாம் என்பது நீங்கள் பயன்படுத்தும் துணிகளை பொறுத்தது. ஒவ்வொரு வாஷிங் மிஷினிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான துணிகளை மட்டுமே போட முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 5 கிலோ எடையுள்ள ஒரு வாஷிங் மினிஷில் 12 டி-சர்ட்கள் மற்றும் 6 டவல்கள் அல்லது மூன்று சட்டைகள் மற்றும் இரண்டு ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றை போடலாம்.


6 கிலோ எடையுள்ள ஒரு வாஷிங் மிஷினில் 20 டி-சர்ட்கள் மற்றும் 10 டவல்கள் அல்லது 5 சட்டைகள் மற்றும் இரண்டு ஜோடி ஜீன்ஸ்கள் வரை போட முடியும். 8 கிலோ திறன் கொண்ட வாஷிங் மிஷினில் உங்களால் 32 டி-ஷர்ட்கள், 2 பெட்ஷீட்கள் மற்றும் 4 துண்டுகள் அல்லது 8 சட்டைகள் மற்றும் மூன்று ஜோடி ஜீன்ஸ் வரை துவைக்க முடியும்.  உங்களிடம் சிறிய அளவு வாஷிங் மிசின் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அதிக அளவில் துணிகளை போடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்களது துணிகளை நன்கு சுத்தமாகவும், மிஷின் அதிக சுமை ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும். வாஷிங் மிஷின் ஓவர் லோடு ஆனால் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.


வாஷிங் மிஷினில் அதிகப்படியான துணிகளை போடும் போது சரியாக மூட மூடப்படாமல் போகலாம், இது மிஷினின் செயல்பாட்டை பாதிக்கும். மினிஷில் ஓவர்லோட் செய்தால், முடிகளில் இருக்கும் ரப்பர்களுக்கு இடையில் துணிகள் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இது அதிக அழுத்தம் காரணமாக அதனுள் இருக்கும் மோட்டார்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக துணிகளில் உள்ள அழுக்குகள் போகாது, அதே சமயம் வாஷிங் மிஷின் பழுதடைய வாய்ப்புள்ளது. அதே போல வாஷிங் மிஷினை சர்வீஸ் செய்வது அதன் ஆயுளை நீட்டிக்கும்.


மேலும் படிக்க | IRCTC நேபாள டூர் பேக்கேஜ்: முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ