மழையில் நனைந்த பிறகு இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!
மழையில் நனைய அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், இதனால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். சளி தொங்கி தோல் ஒவ்வாமை வர ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
தவறுதலாக கூட மழையில் நனைந்துவிட்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் சளி, காய்ச்சல், தோல் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தற்போது இந்தியா முழுவதும் வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழையில் நனைய பலருக்கும் பிடிக்கும் என்றாலும், அதனை விரும்புவதில்லை. வீட்டில் இருக்கும் போது மழை தண்ணீரில் சிறிது நேரம் விளையாடுவது கூட வழக்கம் தான்.
ஆனால் பலருக்கும் இருக்கும் பயம் மழையில் நனைந்துவிட்டால் அடுத்த நாள் சளி பிடிக்கும் என்பது தான். மழையில் நனைந்தபின்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தோல் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மழையில் நனைய பிடித்தாலும் அல்லது எதிர்பாராத விதமாக மழையில் நனைந்துவிட்டாலும் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்
மழையில் நனைந்தால் என்ன செய்ய வேண்டும்?
மழையில் நனைந்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய ஒரு விஷயம் உடைகளை மாற்றுவது ஆகும். இதன்மூலம் சளி, காய்ச்சல் வருவதை தடுக்க முடியும். முடிந்தால் மழையில் நனைந்தவுடன் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பது நல்லது. பிறகு முடியை மென்மையான துணியை கொண்டு துடைக்கவும். உடனடியாக குளிக்க முடியாத நபர்கள் துணிகளையாவது மாற்ற வேண்டும். இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். ஒரு சிலருக்கும் மழையில் நனைந்த பின்பு, உடலில் பாக்டீரியாக்கள் உருவாகலாம். இதன் காரணமாக சரும ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, மழையில் நனைந்துவிட்டால், குளித்துவிட்டு உடலில் ஆன்டி-பாக்டீரியல் கிரீம் பயன்படுத்துவது நல்லது.
மேலும், மழையில் நனைந்தபிறகு முடியை காய வைக்க ஏசி அல்லது ஃபேன் பயன்படுத்த வேண்டாம். சாதாரண அறை வெப்பநிலையில் இருப்பது நல்லது. நீங்கள் பேன் அல்லது ஏசி பயன்படுத்தும் போது உங்கள் உடல் வேகமாக குளிர்ச்சியடையும். இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். எனவே, மழையில் நனைந்தால் உடனே துணிகளை மாற்றிவிட்டு தலையை துடைப்பது நல்லது. நீங்கள் மழையில் நனைந்துவிட்டால் உடலில் உள்ள சூடு குறைய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் சூடான பானங்களை குடிக்கலாம். இஞ்சி டீ, மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பால், சூடான உணவுகள் போன்றவற்றை சாப்பிடலாம். இது உங்களுக்கு சூடான உணர்வை கொடுத்து, சளி மற்றும் இருமலில் இருந்து உங்களை பாதுகாக்கும். எனவே இனி மழையில் நனைந்துவிட்டால் இது போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கண்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? சுகர் லெவல் எகிறுது... ஜாக்கிரதை!!
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ