புதுடில்லி: கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும், இன்னும் முழுமையாக கட்டுபாட்டிற்குள் வரவில்லை. இத்தகைய சூழ்நிலையில், கோவிட் -19 தடுப்பூசி  பற்றாக்குறை இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி என்ற பெயரில்  செய்யப்படும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு புதிய ஆண்ட்ராய்டு வைரஸ் அடங்கிய எஸ்எம்எஸ் (SMS)  மூலம் மக்களின் தொலைபேசிகளையும் கணினிகளையும்  ஹேக் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்களின் அச்சத்தை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி (Corona Vaccine) பெறுவதற்கான பதிவை எளிதில் பெற இந்த லிங்க் உதவும்  என கூறி, மோசடி நபர்கள் எஸ் எம் எஸ் மூலம் லிங்க் அனுப்புவதாக கூறப்படுகிறது.


இந்த எஸ்எம்எஸ் எவ்வாறு செயல்படுகிறது?
இந்த எஸ்எம்எஸ்ஸில், கொரோனா தடுப்பூசி ஸ்லாட்டை முன்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. எஸ்எம்எஸ் உடன் ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த இணைப்பு மூலம் Android Malware அனுப்பப்படுகிறது. ஒரு நபர் இணைப்பைக் கிளிக் செய்யும் போது, ​​அவரது தொலைபேசியில் மால்வேர் நிறுவப்படும். இந்த மால்வேர் மூலம் பயனரின் தொலைபேசியின் தொடர்புகள், எஸ்எம்எஸ் மற்றும் பிற விவரங்களை ஹேக் செய்யலாம்.


ALSO READ | COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?


 


ஏப்ரல் மாதம் முதல் இவ்வாறு அனுப்பபடுகிறது 
சைபர் பாதுகாப்பு நிறுவனமான ESET  நிறுவனத்தின் மால்வேர்  ஆராய்ச்சியாளர் லூகாஸ் ஸ்டெபாங்கோ, இந்த மோசடி ஏப்ரல் 2021 முதல் தொடங்கியது என்றும் அது இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 


இந்த பெயர்ககளை வைத்து அடையாளம் காணவும்
மால்வேருக்கு, Covid-19 vaccine, Covid-19 vaccine registration, Vaccine Register, My-Vaci போன்ற பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.


அதைத் தவிர்க்க செய்ய வேண்டியது என்ன
இதுபோன்ற வைரஸ்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, தெரியாத நாப்ர் அல்லது எண்ணிலிருந்து வரும் எந்த இணைப்பையும் அல்லது எஸ்எம்எஸ்ஸையும் கிளிக் செய்யாதது தான் எப்போதும் ஆரோக்யா சேது (Aarogya Setu) செயலி அல்லது அதிகாரப்பூர்வ கோவின் (CoWIN) வலைத்தளத்திற்கு சென்று பதியவும். எங்கிருந்தோ வரும் அல்லது யாரோ ஒருவர்  அனுப்பும் எஸ்எம்எஸ்  தக்வலை உடனே நீக்கி, அந்த எண்ணை ப்ளாக் செய்யவும். மறுபுறம், நீங்கள் எந்தவொரு இணைப்பையும் தவறுதலாகக் கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் மறந்தும் கூட பகிர வேண்டாம்.


ALSO READ | ALSO READ | Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR