Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது
Aadhaar Mobile Link Online: நீங்கள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க விரும்பினால், ஆன்லைனில் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம்.
ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகும். அதன்படி நீங்கள் இதை செய்யவில்லை என்றால், அரசாங்க சேவைகளை செய்வதில் சிக்கலைச் சந்திக்க நேரிடலாம். உண்மையில் உங்கள் மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் அட்டை இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் மொபைல் எண்ணில் அனைத்து அப்டேட்டையும் நீங்கள் பெறவீர்கள். அதேபோல் தொலைந்த ஆதார் அட்டையைக் கண்டறியவோ அல்லது தேவைப்படும் போது மின்-நகலைப் பதிவிறக்கவோ ஆதார் உதவுகிறது. எனவே ஆதார் சேவை மையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனில் உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை படி படியாக பின்பற்றுங்கள்.
மொபைல் எண்ணை ஆதாருடன் எப்படி இணைப்பது
* நீங்கள் இந்திய தபால் சேவை இணையதளத்துக்கு செல்லவும்.
* இதற்குப் பிறகு உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் விவரங்களை உள்ளிட வேண்டும். இப்போது கீழ்தோன்றும் மெனுவில் PPB-Aadhaar சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதன் பிறகு, UIDAI-Mobile/Email to Aadhaar linking/update என்பதை கிளிக் செய்து, பின்னர் விவரங்களை உள்ளிடவும்.
* அதன் பிறகு உங்கள் எண்ணுக்கு OTP வரும். OTPயை உள்ளிட்ட பிறகு, Confirm Service Request என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | CASHBACK: எல்பிஜி முன்பதிவில் டிஸ்கவுண்ட்! இப்படி புக் செய்தால் 50 ரூபாய் தள்ளுபடி
அதன் பிறகு, ஒரு ஆதார் எண் வழங்கப்படும், அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க முடியும். இதற்குப் பிறகு, உங்கள் விண்ணப்பம் சரிபார்ப்பிற்காக அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்படும். இதற்குப் பிறகு, தபால் நிலைய அதிகாரி உங்கள் முகவரிக்குச் சென்று உங்களிடமிருந்து பயோமெட்ரிக் விவரங்களைப் பெறுவார். இதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? இதை எப்படி சரிபார்ப்பது?
* UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செல்லவும்.
* அதன் பிறகு, மேல் இடது மூலையில் தோன்றும் MyAadhaar விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இதற்குப் பிறகு verify my email/mobile number என்பதைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பம் ஆதார் சேவைகள் பிரிவின் கீழ் இருக்கும்.
* இதற்குப் பிறகு நீங்கள் அட்டை எண், மொபைல் எண், கேப்ட்சா போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
* இதன் மூலம், மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Post Office Scheme: 200 ரூபாய் டெபாசிட் செய்தால் லட்சங்கள் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ