CASHBACK: எல்பிஜி முன்பதிவில் டிஸ்கவுண்ட்! இப்படி புக் செய்தால் 50 ரூபாய் தள்ளுபடி

CASHBACK ON LPG CYLINDER: இந்த ஆப் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து, பம்பர் கேஷ்பேக்கைப் பெறுங்கள், முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2022, 07:29 AM IST
  • கேஸ் சிலிண்டர் முன்பதிவில் 50 ரூபாய் வரை தள்ளுபடி
  • Paytm மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால் தள்ளுபடி
  • Paytm செயலியில் இரு வகைச் சலுகை
CASHBACK: எல்பிஜி முன்பதிவில் டிஸ்கவுண்ட்! இப்படி புக் செய்தால் 50 ரூபாய் தள்ளுபடி title=

நியூடெல்லி: ஆன்லைனில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியைத் தரும். காஸ் புக்கிங்கில் கேஷ்பேக் வழங்கப்படும் ஆப் பற்றி தெரியுமா? இந்த ஆப் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து, பம்பர் கேஷ்பேக்கைப் பெறுங்கள், முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்

Paytm அதன் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வழங்குகிறது. இப்போது Paytm, Bharatgas, Indane மற்றும் HP Gas ஆகியவற்றின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்ஃபார்ம் மூலம், காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் 15 ரூபாய் கேஷ்பேக் மற்றும் Paytm வாலட் மூலம் முன்பதிவு செய்தால் ரூ.50 கேஷ்பேக் வழங்குகிறது. பயனர்கள் Paytm மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் கேஷ்பேக் சலுகைகள்

Paytm ஆனது பயனர்களுக்கு நவம்பர் 29 செவ்வாய் அன்று புதிய கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சலுகை. Paytm இல் புதிய பயனர்கள் இணைந்தால் அவர்களுக்கு, 15 ரூபாய் கேஷ்பேக் பெற, பயனர் 'FIRSTGAS' குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | LPG Gas விலை குறையும்! நம்பிக்கை கொடுக்கும் அரசின் சிறப்புத் திட்டம்

அதேபோல, நீங்கள் Paytm வாலட்டைப் பயன்படுத்தினால், பயனர் 'WALLET50GAS' குறியீட்டை உள்ளிட்டு முன்பதிவு செய்தால் 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் கூடுதல் கட்டணத்தில் எரிவாயு நிரப்புதல்களை முன்பதிவு செய்ய பயனர்களை Paytm அனுமதிக்கிறது.

Paytm மூலம் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும்போது, நீங்கள் எப்போது முன்பதிவு செய்தீர்கள் மற்றும் சிலிண்டர் எப்போது டெலிவரி செய்யப்படும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். Paytm இல், இது தொடர்பாக முழு செயல்முறையையும் பார்க்கலாம், கண்காணிக்கலாம்.

முதல் முன்பதிவு முடிந்தவுடன், அது உங்கள் எல்பிஜி இணைப்பின் முழு விவரங்களையும் சேமிக்கும். நீங்கள் இரண்டாவது முறையாக முன்பதிவு செய்யச் சென்றால், மீண்டும் எல்பிஜி ஐடியை உள்ளிட வேண்டிய அவசியமில்லை.

Paytm மூலம் முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்...

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், உயர்ந்தது டிஏ, இரு தவணைகளில் அரியர்

பேடிஎம்மில் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வது எப்படி?

படி 1: Paytmஐத் திறந்து, ரீசார்ஜ் & பில் பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ் 'காஸ் சிலிண்டர் புத்தகம்' என்ற பிரிவுக்குச் செல்லவும்.
படி 2: இப்போது LPG சிலிண்டர் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்/17 இலக்க LPG ஐடி/நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்.
படி 3: பணம் செலுத்த்தி உங்கள் முன்பதிவைத் தொடரவும். Paytm Wallet, Paytm UPI, கார்டு மற்றும் நெட் பேங்கிங் போன்ற உங்களின் விருப்பமான பேமெண்ட் முறையில் நீங்கள் பணம் செலுத்தலாம்.
படி 4: பணம் செலுத்திய பிறகு, உங்கள் முன்பதிவு உறுதிசெய்யப்படும். அதன்பிறகு 2 முதல் 3 நாட்களில் காஸ் சிலிண்டர் வீட்டிற்கு வந்துவிடும்.

மேலும் படிக்க | துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News