Post Office Scheme: 200 ரூபாய் டெபாசிட் செய்தால் லட்சங்கள் கிடைக்கும்

Recurring Deposit Scheme in Post Office: போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து லட்சக்கணக்கான ரூபாயை திரும்பப் பெற விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கானது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2022, 09:28 AM IST
  • தபால் அலுவலகத் திட்டம்.
  • ரூ.6 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறலாம்.
  • மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்கள்.
Post Office Scheme: 200 ரூபாய் டெபாசிட் செய்தால் லட்சங்கள் கிடைக்கும் title=

தபால் அலுவலகத் திட்டம்: இன்றும் பலர் தபால் நிலையத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர், ஏனெனில் இங்குள்ள முதலீடு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைத்தாலும், ரிஸ்க் அதிகளவில் இருக்கும். எனவே நீங்கள் ஆபத்து இல்லாமல் பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்த இடம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். எனவே அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதன்படி இதில் கணக்கு துவங்கினால் லட்சங்களை திரும்ப பெறலாம்.

100 ரூபாயில் இருந்து தொடங்கலாம்
தபால் அலுவலகத்தின் இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து நீங்கள் முதலீடு செய்யலாம். இது தவிர, ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தில், நீங்கள் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்ய முடியும். அதேபோல் உங்கள் வசதிக்கேற்ப ஒரு வருடம், இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் இத்திட்டத்தில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தபால் துறை மூலம் வட்டியும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | CASHBACK: எல்பிஜி முன்பதிவில் டிஸ்கவுண்ட்! இப்படி புக் செய்தால் 50 ரூபாய் தள்ளுபடி

Post Office Schemes: எந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்

லோன் வாங்கும் வசதியும் இதில் உண்டு
தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் தங்களின் கணக்கைத் தொடங்கலாம். அதேபோல் தாய் அல்லது தந்தை மைனர் குழந்தையின் கணக்கைத் திறக்கலாம். மேலும் இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதில் நீங்கள் லோன் வசதியையும் பெற முடியும். அதன்படி நீங்கள் லோன் / கடன் வாங்க விரும்பினால், உங்கள் தபால் அலுவலகக் கிளையைத் தொடர்பு கொள்ளவும். இந்தக் கடனை 12 தவணைகளில் டெபாசிட் செய்யலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையில் 50% கடன் / லோன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

6 லட்ச ரூபாய்க்கு மேல் பெற இதப் பண்ணுங்க
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 அதாவது ஒரு நாளுக்கு ரூ.200 டெபாசிட் செய்தால், 90 மாதங்களுக்குப் பிறகு அதாவது 7.5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை நீங்கள் பெறுவீர்கள். ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் ரூ.72,000 டெபாசிட் செய்வீர்கள். இதேபோல், நீங்கள் 90 மாதங்கள் அல்லது 7.5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை முதலீடாக வைப்பீர்கள். இதற்குப் பிறகு, திட்டத்தின் மெச்சூரிட்டியின் போது, ​​நீங்கள் 1,36,995 ரூபாய் திரும்பப் பெறுவீர்கள். இந்த வழியில் நீங்கள் 90 மாதங்களுக்குப் பிறகு மொத்தம் ரூ.6,76,995 பெறுவீர்கள். இதன் மூலம் ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். 

மேலும் படிக்க | 7th pay Commission: 3 தவணைகளில் கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News