ஸ்காட்லாந்து நாட்டின் டண்டீ பகுதியை சேர்ந்தவர் 24 வயதான Shauna higgins. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில மருந்துகள் எடுத்துக் கொண்டதால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக பல வழிகளை தேடிய அவர் கடைசியாக  புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணரும்,சலூன் கடை உரிமையாளருமான Mandy என்பவரிடம் சென்றுள்ளார். பின்னர் , இளம் பெண் Shauna வை பரிசோதித்த Mandy அவரை hair extension செய்து கொள்ளும்படி  அறிவுறுத்தியுள்ளார்.  இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி  shauna வுக்கு முடியின் வேர் பகுதி பக்கத்தில் இருந்து ஹேர் எக்ஸ்டென்ஷனை பொருத்தியுள்ளனர். இதற்காக அவரிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் மகிழ்ச்சியோடு வீடு திரும்பிய Shauna வுக்கு அது நீட்டிக்கவில்லை. Hair extension வைத்த பிறகு தான் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சொந்த மகளை மணந்த தந்தை... அதுவும் 4வது மனைவியாகவா? - உண்மை இதுதான்!



அது நான்கு வாரத்திற்குள் இன்னும் மோசமாகி தலையில் வழுக்கையே விழுந்துள்ளது. மேலும் தலையில் கொப்புளங்கள் ஏற்பட்டு ரத்தக்கசிவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிரண்டு போன shauna மறுபடியும் சலூன் கடைக்கு சென்று தனக்கு நடந்த விஷயங்கள் பற்றி தெரிவித்து சண்டை போட்டுள்ளார். இதை பார்த்த Mandy, shauna வுக்கு அந்த முறை இலவசமாகவே சிகிச்சை கொடுத்துள்ளார். இதன் பின்னர்தான் முடி உதிர்வு இன்னும் அதிகமாகியுள்ளது. ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட shauna வழக்கறிஞரை நியமித்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இருந்தாலும் Mandy தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.



இந்த சூழ்நிலையில் shauna வுக்கு தலையில் கொப்புளங்கள் ஏற்பட்டதில் வலி அதிகமாக ஏற்பட்டதால் அவரால் வழுக்கை தலையை மறைக்க விக் கூட அணிய முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்த காயங்களை ஆற்றுவதற்காக தலை முழுவதும் மொட்டை அடிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆனதை அடுத்து பெண்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  பெண்கள் தங்களை அழகாக்கி கொள்வதற்காக பல்வேறு சிக்கலான சிகிச்சைகளை எடுக்கும் நிலையில் அதன் சாதக பாதகங்களை நன்றாக யோசித்த பின் அதை செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.


மேலும் படிக்க | மத்தியப் பிரதேசத்தில் வியாபம் 2.0! திருட்டை நிறுத்தவே மாட்டீங்களா? ராகுல்காந்தி கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ