இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் உடல் பருமனாக இருப்பதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதனால் பல வித உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஜிம் என பல வழிகளில் எடையை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சிறிய பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தினால் போதும். அதேபோல் சில பழக்கங்களை நிறுத்திவிட்டாலும், எடை குறைப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக நாம் ஜப்பானிய பெண்களை பார்க்கும்போது அவர்கள் எப்படி இத்தகைய மெலிதான உடல் தோற்றத்துடனும், பளிச் என்ற முகப்பொலிவுடனும் இருக்கிறார்கள் என வியப்பதுண்டு. ஜப்பனிய பெண்களை போன்ற தொற்றம் மற்றும் முகப்பொலிவை பெற பலர் பல்வேறு முறைகளை முயற்சி செய்கிறார்கள். எனினும், எடையை அத்தனை எளிதாக குறைக்க முடிவதில்லை. ஆனால், இப்படி முயன்று தோற்றவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க ஜப்பான் மக்கள் பின்பற்றும் சில எடை இழப்பு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜப்பானிய எடை குறைப்பு ரகசியங்கள்
சோயாபீன்ஸ் சாப்பிடுங்கள்
ஜப்பானியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகள் மற்றும் சோயாபீன்களை அதிகம் உட்கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் உடலில் அதிக கொழுப்பு சேராது. இதன் காரணமாக அவர்களிடம் சுறுசுறுப்பு நிலைத்திருக்கிறது. உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கிறது.
நன்றாக மென்று உண்ணுங்கள்
பெரும்பாலான மக்கள் அவசர அவசரமாக உணவை சாப்பிடுகிறார்கள். ஆனால் ஜப்பானியர்கள் மெதுவாக, உணவை நன்றாக மென்று சாப்பிடுகிறார்கள். இது அதிக ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் தருகிறது. இது தவிர, பற்கள் மற்றும் வாய்க்கும் இதன் மூலம் நல்ல பயிற்சி கிடைக்கிறது.
நார்ச்சத்து மிக்க உணவு
ஜப்பானியர்கள் தங்கள் உணவில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். இவர்கள் ஒமேகா 3 கொண்ட கடல் உணவை சாப்பிட விரும்புகிறார்கள் மற்றும் இது எடை இழப்புக்கு சிறந்தது.
மேலும் படிக்க | மூளை - உடலை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு... தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
சிறிது சிறிதாக சாப்பிட வேண்டும்
ஜப்பானியர்கள் பெரும்பாலும் ஃப்ரெஷ்ஷான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுமட்டுமின்றி, இவர்கள் ஒரே நேரத்தில் உணவை சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாக அவ்வப்போது சாப்பிடுகின்றனர். இது மெட்டபாலிசம் மற்றும் செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது.
சூடான குளியல்
ஜப்பான் மக்கள் சூடான நீரில் குளிக்க விரும்புகிறார்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக அவர்கள் நம்புகிறார்கள். நல்ல இரத்த ஓட்டம் காரணமாக, வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்பட்டு எடை கட்டுக்குள் இருக்கும்.
மூலிகை தேநீர்
- ஜப்பான் மக்கள் பல்வேறு வகையான மூலிகை தேநீர் அருந்துகிறார்கள். இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும் இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. ஜப்பானியர்கள் சிறிய வேலைகளுக்கும் நடந்து செல்லவே விரும்புகின்றனர். எதற்கெடுத்தாலும், கார் ஆட்டோ என அவர்கள் வாகனங்களை சார்ந்திருப்பதில்லை. இதனால், அவர்களது உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.
வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குங்கள்
தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், கொழுப்பை எரிப்பது எளிதாகும். நீங்கள் விரும்பினால், தனியா தண்ணீர், தேன் மற்றும் எலுமிச்சை நீர் அல்லது சீரக நீர் ஆகியவற்றை உட்கொண்டு உங்கள் நாளைத் தொடங்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | டெங்கு நோய் வராமல் தடுப்பது எப்படி..? இதோ சில டிப்ஸ்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ