All Souls Day: தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிப்பு: நீத்தோர் நினைவு நாள்
All Souls Day: இன்று கல்லறைத் திருநாள். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் `கல்லறை திருநாள்` கடைப்பிடிக்கப்படுவது கிறிஸ்துவர்களின் வழக்கம்
கோவை: இன்று கல்லறைத் திருநாள். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் 'கல்லறை திருநாள்' கடைப்பிடிக்கப்படுவது கிறிஸ்துவர்களின் வழக்கம். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளைப் பூக்களால் அலங்கரித்தும், உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மூதாதையர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டி, வழிபடும் நாள் இது. இறந்தோரை நினைவுகூரும் சிறப்புமிக்க இந்நன்னாளில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது.
கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.
கோவையில், கல்லறை திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய தலைமை போதகர் ஆயர் டேவிட் பர்னபாஸ் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார்.
இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர் தங்களது முன்னோர்களின் கல்லறையில் இருக்கும் சீரமைத்து வர்ணம் பூசி கல்லறைகளை அலங்கரித்து மலர் தூவி, மெழுகுவர்த்தி பற்ற வைத்து பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.
மேலும் படிக்க | 'எங்கள் நிலத்தை போலீஸ் அதிகாரியே அபகரித்துள்ளார்’: குற்றம் சாட்டும் NRI தம்பதி
தூத்துக்குடியில் கல்லறை திருநாள்
ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைமுன்னிட்டு கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்மாலை அணிவித்தும், மெழுவர்த்தி ஏற்றியும் அவர்களின் ஆன்மா சாந்தி பெற சிறப்பு ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டிலுள்ள கத்தோலிக்க திருச்சபையில் சிறப்புத்திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்றனர். தூத்துக்குடி மாநகரில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | அமீரக மக்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் பெட்ரோல் விலையில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ