ஹிஜாபை தொடர்ந்து பைபிள் - தொடர்ந்து சர்ச்சையில் கர்நாடகம்

பைபிள் ஏடுத்து வருவதாக எதிர்க்க மாட்டோம் என பள்ளிகளில் உறுதிமொழி. கல்வி நிலையங்களில் மத பிரசாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Apr 26, 2022, 11:55 AM IST
  • கர்நாடகாவில் மீண்டும் மத சர்ச்சை
  • கல்வி நிலையங்களில் மதபுகுத்தலா?
  • எந்த மதமாய் இருந்தாலும் வெளியேதானே?
ஹிஜாபை தொடர்ந்து பைபிள் - தொடர்ந்து சர்ச்சையில் கர்நாடகம்

கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பள்ளிக் கல்லூரி நிர்வாகங்கள் கூறியதால் பலத்த போராட்டங்கள் வெடித்தன. பல மாணவிகள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்தனர். பலர் ஹிஜாப் அணிந்துவந்து வகுப்பறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வலதுசாரி மாணவர்கள் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் கர்நாடகாவில் அடுத்த ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மதரீதியான உறுதிமொழி பெறப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கிருஸ்தவ மதத்தின் புனித நூலான பைபிளை எடுத்து செல்வதை எதிர்க்க மாட்டோம் என பெற்றோர் உறுதிமொழி அளித்தால்தான் மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது கர்நாடக கல்வி சட்டத்தை மீறுவதாக வலதுசாரி அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க | புழல் அருகில் பள்ளி சென்ற மூன்று சிறுமிகள் மாயம்: பீதியில் பெற்றோர்

மேலும் பள்ளியின் 11ஆம் வகுப்பு சேர்க்கை படிவத்தில் “குழந்தைகளின் ஆன்மீக நலனுக்காக காலையில் பிரேயர், கிருஸ்தவ வேத வகுப்புகள் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று உறுதிமொழி பெறப்படுகிறது. கூடவே பள்ளி வகுப்புகளில் பைபில் வைத்திருப்பதை எதிர்க்க மாட்டோம் என்று கையெழுத்து பெறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா, இந்தப் பள்ளி கிருஸ்தவர் அல்லாத மாணவர்களும் பைபிளை படிக்க வேண்டும் என வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இப்படியான மத திணிப்பு கல்வி நிலையங்களில் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளி நிர்வாகம், தாங்கள் பைபிள் அடிப்படையிலான கல்வியை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

More Stories

Trending News