ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலுவேரா ஜெல் தயாரிக்கும் முறை: 
 
1. கற்றாழை (Aloe Vera) செடிகளில் இருந்து சில கிளைகளை உடைத்து மேலே இருக்கும் பச்சை நிற தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லை ஸ்பூனால் தனியாக எடுக்கவும். இதனை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.


2. கடைகளில் ஜெலட்டின் பவுடர் வாங்கலாம். இது ஜெல்லி செய்வதற்காக பயன்படுத்தும் ஒரு பவுடர். ஒரு சிறிய கப்பில் ஜெலட்டின் பவுடரை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொண்டு, அதில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும். 



3.  இதை அடுப்பில் நேராக வைக்காமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதன் மீது ஜெலட்டின் பவுடர் கலவையை வைத்து 3 லிருந்து 5 நிமிடங்கள் வரை சுட வைத்தால் ஜெல் பதத்திற்கு வந்துவிடும்.


மேலும் படிக்க | Raw Ginger: மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி..!!


4. ஜெலட்டின் கலவை ஆறிய உடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள ஆலோவோராவை  கலந்தால் ஆலுவேரா ஜெல் ரெடி.   


5. கடைகளில் கிடைக்கும் அலோ வேரா ஜெல்லில்  நிச்சயமாக ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்துதான் இருக்கும். அதனால் தான் நீண்ட நாட்களுக்கு ஜெல் கெட்டுப்போகாமல் இருக்கிறது. ஆனால் நம் வீட்டில் தயார் செய்யும் இந்த ஆலோ வேரா ஜெல்லை 10 நாட்களுக்கு மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR